Trisha - எங்கே போனாலும் இதே வேலையா போச்சே.. ரசிகர்களின் செயலுக்கு த்ரிஷா ரிப்ளைய பாருங்க
சென்னை: Trisha (த்ரிஷா) பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட த்ரிஷாவிடம் ரசிகர்கள் செய்த செயலும் அதற்கு த்ரிஷா செய்த ரிப்ளையும் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். சோழர்கள் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தையும், அவரது கற்பனையையும் சேர்த்து தொடராக எழுதினார். அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற அந்தத் தொடர் புத்தகமாக வடிவம் பெற்றது. பொன்னியின் செல்வன் எழுதப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலானாலும் இன்றுவரை பலரும் அதனை விரும்பி படித்துவருகின்றனர்.

ஆரம்பித்த மணிரத்னம்: பொன்னியின் செல்வன் நாவலை எப்படியாவது திரைப்படமாக பார்த்துவிட வேண்டும் என நாவலை படித்தவர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அதற்கான முயற்சியில் எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோர் இறங்கினர். ஆனால் அது நிறைவேறவில்லை. இந்தச் சூழலில் மணிரத்னம் பொன்னியின் செல்வனை திரைப்படமாக இயக்குகிறார் என அறிவிப்பு வெளியானது.
லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வனில் கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்தது. கடந்த வருடம் முதல் பாகம் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றது. படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது.
புதிய தொழில்நுட்பம்: ஏப்ரல் 28ஆம் தேதி படம் வெளியாகவிருப்பதால் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் படம் பொன்னியின் செல்வன் 2 என்ற பெருமையையும் இந்தப் படம் பெற்றிருக்கிறது. படம் ஏற்கனவே சூப்பர் அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு 4DX தொழில்நுட்பத்தில் பார்த்தால் மேற்கொண்டு புது அனுபவமாக இருக்கும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் 2 புரோமோஷன்: படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் படத்தின் புரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. அந்தவகையில் பொன்னியின் செல்வன் Anthem வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ரசிகர்கள் செய்த செயலும், அதற்கு த்ரிஷா கொடுத்த ரிப்ளையும் கவனம் ஈர்த்துள்ளது.

லியோவில் த்ரிஷா: த்ரிஷா பொன்னியின் செல்வன் 2 மட்டுமின்றி லியோ படத்திலும் நடித்துவருகிறார். பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் அவர் ஜோடி சேர்ந்திருப்பதாலும், லோகேஷ் கனகராஜ் - விஜய் மீண்டும் சேர்ந்திருப்பதாலும் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 புரோமோஷனில் கலந்துகொண்டு த்ரிஷா பேச மேடை ஏறுகையில், ரசிகர்கள் அனைவருமே லியோ லியோ என கத்தினர்.
த்ரிஷா ரிப்ளை: இதற்கு பதிலளித்த த்ரிஷா அதை அப்புறம் பேசிக்கலாம் அப்புறம் பேசிக்கலாம் என ரிப்ளை செய்தார். இதனையடுத்தே ரசிகர்கள் அமைதி காத்தனர். இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் எந்த படம் ஓடுனாலும் ஹீரோ அங்க நாங்கதான் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். மேலும் லியோ படம் நிச்சயம் வசூலில் சாதனை படைக்கும் என நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











