15 ஆண்டுகளுக்கு பிறகு சிரஞ்சீவியுடன் கைகோர்க்கும் த்ரிஷா!
ஹைதராபாத் : பேட்ட, 96 என இரண்டு வெற்றிகளை அடுத்தடுத்து கொடுத்த திரிஷா இப்பொழுது மணிரத்னத்தின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வனில் இணைந்துள்ளார்.
மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் இவருக்கு தமிழில் கை நிறைய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க திரிஷா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை
அறிமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் மனதை வருடும் உணர்ச்சிபூர்வமான காதல் திரைப்படமாக வெளியான 96 வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது மாபெரும் வெற்றியும் பெற்றது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதல்முறையாக திரிஷா நடித்திருந்தார். இதுவரை பல திரைப்படங்களில் திரிஷா நடித்திருந்தாலும் இந்த திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றிருப்பார்.

கேங்க்ஸ்டர் படங்களை
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக கேங்க்ஸ்டர் திரைப் படங்களை மட்டுமே இயக்கி வரும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்த திரிஷாவுக்கு பரமபதம், கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி போன்ற படங்கள் வெளியாக தயாராக இருக்க அடுத்து மணிரத்னத்தின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வனிலும் நடித்து வருகிறார்.

வரலாறு காணாத வசூலை
இதுவரை நடிகராக மட்டுமே கலக்கி வந்த பிரித்விராஜ் முதல் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்து இயக்கியிருந்த லூசிஃபர் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருக்க அரசியல் கலந்த ஆக்ஷன் படமாக உருவான லூசிஃபர் சென்ற ஆண்டு வெளியாகி வரலாறு காணாத வசூலை வாரி குவித்து கிட்டத்தட்ட 200 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

தெலுங்கு ரீமேக் உறுதி
இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது என சில பேச்சுவார்த்தைக்கு அடிபட்டு வர இப்பொழுது தெலுங்கு ரீமேக் உறுதி செய்யப்பட்டு அதில் நடிகர் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். ரீமேக் படங்களை இயக்குவதில் பெயர் போனவரான மோகன் ராஜா இந்த படத்தை இயக்க உள்ளார். மேலும் இதில் முக்கியமான கதாபாத்திரமான நடிகை மஞ்சு வாரியர் நடித்த வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கால்ஷீட் பிரச்சனை காரணமாக திரிஷா ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் லூசிஃபர் தெலுங்கு ரீமேக் டோலிவுட்டிலும் மிகப்பெரிய வெற்றி அடையும் வாய்ப்புகள் மிக அதிகமாகவே இருக்க இப்பொழுது திரிஷா இதில் ஒப்பந்தமாகி இருப்பது தெலுங்கு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் திரிஷா மற்றும் சிரஞ்சீவி கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைகின்றனர். இதற்கு முன் 2006 ஆம் ஆண்டு வெளியான ஸ்டாலின் படத்தில் ஜோடி சேர்ந்தவர்கள் இப்பொழுது லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











