»   »  த்ரிஷாவின் பல ஆண்டு கனவை நனவாக்கி வைக்கிறார் தனுஷ்?

த்ரிஷாவின் பல ஆண்டு கனவை நனவாக்கி வைக்கிறார் தனுஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

கபாலி படத்தை அடுத்து பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். இது கபாலி படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.

அமலா பால்

அமலா பால்

ரஞ்சித், ரஜினி மீண்டும் கூட்டணி சேரும் படத்தில் தனுஷின் தோழியான அமலா பால் ஹீரோயினாக நடிக்கக்கூடும் என்று முதலில் செய்திகள் வெளியாகின.

த்ரிஷா

த்ரிஷா

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக அமலா பால் அல்ல த்ரிஷா நடிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது நடந்தால் த்ரிஷாவின் பல ஆண்டு கனவு நனவாகும்.

ரஜினி

ரஜினி

நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துவிட்டேன். ஆனால் இன்னும் சூப்பர் ஸ்டாருடன் மட்டும் நடிக்க முடியவில்லை என்று த்ரிஷா அவ்வப்போது கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்

தனுஷ்

த்ரிஷாவும், தனுஷும் பல ஆண்டுகளாகவே நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். கொடி படத்தில் வேறு ஜோடி போட்டு நடித்தனர். இந்நிலையில் ரஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தனுஷ் தனது தோழி த்ரிஷாவுக்கு கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

English summary
Buzz is that Trisha is likely to share screen space with Rajinikanth in his upcoming movie to be directed by Pa. Ranjith.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil