த்ரிஷாவுக்கு ஒரு நல்லதென்றால் உங்களுக்கு சொல்லாமலா? - த்ரிஷா அம்மா
சென்னை: நடிகை த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்ட நிலையில், அந்த செய்தியை மறைத்து வருகிறார் அவரது தாயார் உமா கிருஷ்ணன்.
த்ரிஷாவுக்கு ஏதாவது நல்லது நடந்தால் சொல்லாமலிருப்பேனா என்று அவர் கூறியுள்ளார்.

பத்தாண்டுகளுக்கு மேல் சினிமாவில் நடித்து வரும் த்ரிஷாவுக்கும் சமீப காலமாக படங்கள் தயாரிக்க ஆரம்பித்துள்ள தொழிலதிபர் வருண் மணியனுக்கும் நேற்று முன் தினம் த்ரிஷாவின் வீட்டில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது.
இந்த செய்தி நேற்று முழுவதும் மீடியாவில் வலம் வந்தது.
இந்த நிலையில் த்ரிஷாவின் தாயார் இந்த செய்தியை மறுத்துள்ளார். த்ரிஷாவுக்கு ஏதாவது நல்லது நடந்தால் உங்களுக்கு சொல்லாமல் இருப்பேனா என்று மீடியாவுக்கு அவர் தகவல் அனுப்பியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications