குக் வித் கோமாளி பிரபலத்திற்கு ஜோடியாகும் த்ரிஷா... நேற்று வெளியேறி இன்று ஹீரோ ஆகும் கன்டஸ்டன்ட் ! !

சென்னை : பிரபல நடிகை த்ரிஷா நடிக்கும் புதிய படத்திற்கு த்ரிஷாவின் ஜோடியாக இளம் நடிகர் கமிட் ஆகியுள்ளார். குக் வித் கோமாளி போட்டியாளரான அவர் போட்டியிலிருந்து வெளியேறிய மறுநாளே இந்த ஜாக்பாட் அடித்துள்ளது.

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா லேசா லேசா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர். தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரங்கள் பேசும்படியான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருகிறார்.

 10 ஆண்டுகளை கடந்த த்ரிஷா

10 ஆண்டுகளை கடந்த த்ரிஷா

விஜய்யுடன் அவர் நடித்த கில்லி படம் அவரது நடிப்பிற்கு சிறப்பான எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. தற்போது அவர் திரைத்துறைக்கு வந்து 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் தற்போது பெண்களை மையப்படுத்தும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

குந்தவை கேரக்டர்

குந்தவை கேரக்டர்

தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் வரலாற்று காவியத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். சமீபத்தில் இவரது கேரக்டரின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படம் வரும் செப்டம்பரில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய படத்தின் பூஜை

புதிய படத்தின் பூஜை

தொடர்ந்து பிருந்தாவின் வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார் த்ரிஷா. இதில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இவை ஒவ்வொன்றாக ரிலீசாக உள்ளன. இந்நிலையில் தற்போது புதிய படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கியுள்ளது.

தி ரோட் படம்

தி ரோட் படம்

இந்தப் படத்திற்கு தற்காலிகமாக தி ரோட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கவுள்ளார். படத்தின் சூட்டிங் இன்றைய தினம் துவங்கியுள்ள நிலையில், மதுரை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

உண்மை சம்பவம்

உண்மை சம்பவம்

2000ல் மதுரையில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் குக் வித் கோமாளி புகழ் சந்தோஷ் பிரதாப், சார்பட்டா பரம்பரை டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டவர்கள் முக்கியமான ரோல்களில் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X