திரிஷாவின் பரமபதம் விளையாட்டு.. அடுத்த வாரம் திரையில்!
சென்னை: திரிஷாவின் பரமபதம் விளையாட்டு அடுத்த வாரம் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ், தெலுங்கு திரையுலகில் இன்றளவும் கூட முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. ஒரு ஹீரோயினாக பல காலமாக சினிமாவை கட்டி ஆள்வது திரிஷா ஒருவர் தான். ஜோடியில் ஆரம்பித்த திரைப்பயணம் பரமபதம் வரை நீண்டு கொண்டே இருக்கிறது. தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார் திரிஷா.

சாமியில் புவனாவாக இவர் பவனி வந்தார். கில்லியில் தனத்தை வழங்கும் தனலட்சுமியாக வந்தார் திரிஷா. இவர் நடிப்பை பார்தது நாளுக்கு நாள் இவரது ரசிகர் பட்டாளம் உயர்ந்து, நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. தமிழை போல தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தார் திரிஷா.
தமிழில் ஒரு படம் வெற்றி பெற்றால், அதனை மற்ற மொழிகளில் ரீமேக் செய்யும் போது அதில் திரிஷாவையே நடிக்க வைப்பார்கள். அந்த அளவிற்கு அவரது கதாபாத்திரம் வேறு எவராலும் செய்ய முடியாத அளவுக்கு நடித்து இருப்பார். சர்வமில் இவர் நடித்த நடிப்பிற்கு மயங்கிய இளைஞர்கள் சிறகுகள் விரித்து வானத்தில் பறந்தனர். அழகான ராட்சசியாக பேய் படங்களிலும் நடித்துள்ளார் திரிஷா.

இவருக்கு ஒரு மாஸ் கம்பேக் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்லாம் அந்த அளவிற்கு இருந்தது இவர் நடித்த "96" திரைப்படம். ரசிகர்கள் மனதில் இன்னமும் ஜானுவாக வாழ்ந்து வருகிறார் திரிஷா.
தற்போது இவர் நடித்து இருக்கும் திரைப்படம் பரமபதம் விளையாட்டு. இது திரிஷாவிற்கு 60வது திரைப்படம். இதில் அவர் ஒரு மருத்துவராக வருகிறார். இப்படத்தில் திரிஷாவுடன் நந்தா, வேல ராமமூர்த்தி, தயாரிப்பாளர் ஏ. எல். அழகப்பன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த விளையாட்டை ஆடுபவர்கள் ஏணியுடன் மேலே ஏறுவார்கள் அல்லது பாம்பு கடித்து கீழே வருவார்கள். வாழ்க்கையே ஒரு பரமபத விளையாட்டு தான்.

இந்த படத்திலும் அதே தான் ஒரு உண்மை கதையை படமாக எடுத்துள்ளார் இயக்குனர் திருஞானம். திரிஷா வாழ்க்கையில் நடக்கும் பரமபதம் விளையாட்டே இந்த கதை என்று சொல்லப்படுகிறது. திரிஷா ரசிகர்கள் இந்த படத்திற்காக பல மாதங்களாக காத்து இருக்கின்றனர், பல மாதம் தள்ளிப்போன இத்திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











