த்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு…தமிழ் புத்தாண்டுக்கு ஒடிடியில் ரிலீஸ் !
சென்னை : த்ரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு நேரடியாக ஓடிடி தளத்தில் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளது.
Recommended Video
த்ரிஷா, விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார்.
கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா

ரஜினிக்கு ஜோடியாக
முன்னணி நடிகையாக வலம் வந்த த்ரிஷா, தமிழிலில் கடைசியாக பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த இந்தப்படத்தில் அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின் இவர் நடித்த எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.

பிஸியாக நடித்து வருகிறார்
நடிகை த்ரிஷா மணிரத்னத்தின் பொன்னியன் செல்வன், சுந்தர் பாலுவின் கர்ஜனை, எச் வினோத்தின் சத்துரங்க வேட்டை 2 படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், எம் சரவணனின் ராங்கி மற்றும் சுமந்த் ராதாகிருஷ்ணனின் சர்க்கரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

த்ரிஷா 60வது படம்
இத்திரைப்படம் த்ரிஷாவின் 60வது திரைப்படமாகும். இப்படத்தை திருஞானம் இயக்கி உள்ளார்.க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இப்படத்தில் த்ரிஷா மருத்துவராக நடித்துள்ளார். இப்படத்தில், நந்தா, வேல ராமமூர்த்தி, தயாரிப்பாளர் ஏ. எல். அழகப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே வெளியாக வேண்டி இப்படம் கொரோனா காரணமாக தாமதமாகிக்கொண்டே சென்றது. தற்போது இந்த படம் டிஸ்டினி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ந் தேதி வெளியாக உள்ளது.
வெற்றி பெற்றன
நயன்தாரா,ஆர்.ஜே.பாலாஜி நடித்த மூக்குத்தி அம்மன், ஜெயம் ரவியின் பூமி மற்றும் ஆர்யா, சயீஷாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டெடி உள்ளிட்ட பல தமிழ் படங்கள் ஏற்கனவே OTT தளத்தில்வெளியாகி வெற்றிப்பெற்ற நிலையில் இந்த திரைப்படமும் ஒடிடியில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











