‘தலைவர் ஹாஸ்பிட்டல்ல இருக்காரு... சிசிடிவி கேமராவை ஆஃப் பண்ணுங்க’.. திரிஷாவும் சர்ச்சைக்கு ரெடி!
பரமபதம் விளையாட்டு படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சென்னை: திரிஷாவின் 60வது படமாக தயாராகி வரும் பரமபதம் விளையாட்டு படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தவர் என்ற பெருமைக்குரியவரான திரிஷாவின் பிறந்தநாள் இன்று. அதையொட்டி, அவர் நடித்து வரும் பரமபத விளையாட்டு படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இது த்ரிஷாவுக்கு 60 வது படம் ஆகும். அரசியல் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா மருத்துவராக நடித்துள்ளார்.

இது தான் கதைக்களம்:
அவருக்கு மகள் ஒருவரும் இருக்கிறார். அரசியல் தலைவர் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதால் திரிஷா பிரச்சினையில் சிக்குவது தான் படத்தின் கதைக்களம் என்பது டிரெய்லர் மூலம் தெரிய வருகிறது. வில்லன்களிடம் இருந்து மகளைக் காப்பாற்ற அவர் போராடும் காட்சிகளும் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

வசனங்கள்:
'தலைவர் ஹாஸ்பிட்டல்ல இருக்கார், சிசிடிவி கேமராவை ஆப் பண்ணுங்க' என்ற வசனமும், அந்தத் தலைவரின் உடல்நிலை குறித்து திரிஷா மருத்துவ அறிக்கை வெளியிடுவதும், தமிழகத்தில் நடந்த சில முக்கிய அரசியல் நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகிறது. நிச்சயம் சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு எதிராக பொங்கி எழுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

சர்ச்சை:
சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் இது போன்ற சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. தற்போது அந்தப் பட்டியலில் திரிஷாவும் இணைந்து விட்டார். டிரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் விறுவிறுப்பைக் கூட்டுவதாக உள்ளது.

திருஞானம் இயக்கம்:
இந்தப் படத்தில் நடிகை த்ரிஷாவுடன், நந்தா துரைராஜ், ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சோனா உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். படத்தை திருஞானம் இயக்கியுள்ளார். இந்த படத்தை 24ஹவர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











