தனது அடுத்த படமான ராங்கி ஷூட்டிங்கை முடித்தார் திரிஷா

சென்னை: ராங்கி பட ஷூட்டிங்கை முடித்தார் திரிஷா. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிளில் ஒருவர் தான் திரிஷா. இவரது முழு பெயர் திரிஷா கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார் இவர் , மற்றும் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார் திரிஷா.

பல திரைபடங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு மிகப்பெரிய மார்கெட்யை ஏற்படுத்திய திரைப்படம் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி . இப்படத்தில் நடித்த கதாபாத்திரம் புவனா இன்றும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பின்பு மலையாளம் தெலுங்கு என்று எல்லா மொழிகளிலும் நடித்தார் திரிஷா. தான் நடித்த முதல் தெலுங்கு திரைப்படத்திற்காக தனது முதல் பிலிம்பேர் விருதும் பெற்றார்.

Trishas Raangi movie shooting wrapped

பின்பு தமிழில் சினிமாவில் மெகாஹிட் படமான விஜய்யின் கில்லி படத்தில் நடித்தார் அதில் தனலட்சுமி என்னும் கதாபாத்திரம் அவருக்கு கன கச்சிதமாக
பொருந்தியது அதிலும் அப்படத்தில் பிரகாஷ்ராஜ் செல்லம் என்று திரிஷாவை அழைத்தது இன்றும் கூட திரிஷாவை அப்படியே அழைக்கின்றனர். பின்பு மணிரத்தினம் படமான ஆயுத எழுத்தில் நடித்தார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.

Trishas Raangi movie shooting wrapped

சுந்தர். சி இயக்கிய அரண்மனை இரண்டாம் பாகத்தில் நடித்து அசத்தினார். பின் ஒரு கம்பெக் படமாக 96 திரைப்படத்தில் நடித்தார் ஒரு கம்பெக் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். பல நாட்கள் கழித்து திரிஷா நடிப்பில் படம் வந்தாலும் அவரை தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர்.

Trishas Raangi movie shooting wrapped

அவ்வப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. தற்போது எங்கேயும் எப்போதும் திரைப்படத்தை இயக்கிய சரவணன் இவரை வைத்து "ராங்கி" என்ற படத்தை இயக்கி வருகிறார் அப்படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்துள்ளது. விரைவில் படம் திரைக்கு வரவிருக்கிறது
இப்படத்தை லைகா புரோடக்சன் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். சத்யா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இவர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X