லேடி ஆக்ஷன் சூப்பர்ஸ்டாராக மாறிய த்ரிஷா.. ராங்கி டீஸர் ரிலீஸ்!
சென்னை: த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
96 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா மீண்டும் கம்பேக் ஆகியுள்ளார். சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த த்ரிஷா, தற்போது ராங்கி படத்தில் ஆக்ஷன் சூப்பர்ஸ்டாராக மாறியுள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ராங்கி படத்தை ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் மற்றும் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு ஏ.ஆர். முருகதாஸ் திரைக்கதை எழுதியுள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள ராங்கி படத்தின் டீஸரை தற்போது நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

20 வருஷம்
1999ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக முகம் காட்டிய நடிகை த்ரிஷா, இந்த ஆண்டு வெளியான ரஜினியின் பேட்ட படத்தில் சிம்ரனுக்கு போட்டியாக ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த 20 ஆண்டுகளில் த்ரிஷா தனது பல திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை என்டர்டெயின்மென்ட் செய்து வருகிறார்.

வெற்றி.. தோல்வி..
20 வருட சினிமா வாழ்க்கையில் நடிகை த்ரிஷா பல சூப்பர் ஹிட் படங்களையும் சில சொதப்பல் படங்களையும் மாறி மாறி கொடுத்துள்ளார். சிம்ரன், ஜோதிகா வரிசையில் நடித்து வந்த த்ரிஷா இன்னமும் இளம் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு நடித்து வருகிறார்.

கம்பேக்
விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸிக்குப் பிறகு த்ரிஷாவுக்கு நல்ல கம்பேக் என்றால் அது 96 ஜானு தான். 96 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் பல படங்களில் கமீட் ஆகி நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா. அடுத்த ஆண்டு த்ரிஷாவுக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராங்கி டீஸர்
ராங்கி டீஸர்
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் திரைக்கதையில் இயக்குநர் சரவணன் இயக்கியுள்ள ராங்கி படத்தின் டீஸரை தற்போது நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் உருவாகியுள்ள ஆக்ஷன் கலந்த வித்தியாசமான திரைக்கதையில், இதுவரை பார்த்திராத நடிகை த்ரிஷாவை டீஸரிலேயே பார்க்க முடிகிறது.
எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு, மிகப்பெரிய வெற்றி படத்திற்காக காத்திருக்கும் இயக்குநர் சரவணன், நிச்சயம் ராங்கி படத்தை தரமாக தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 2020ம் ஆண்டு படம் வெளியாகவுள்ளது.

அடுத்தடுத்து
ராங்கி படத்தை தொடர்ந்து த்ரிஷா நடிப்பில் பரமபதம், கர்ஜனை உள்ளிட்ட படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் சதுரங்க வேட்டை 2ம் பாகம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்புக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











