லியோ பேமிலி.. காஷ்மீரில் படகு சவாரி செய்த த்ரிஷா.. வெளியான க்யூட் புகைப்படம்!
ஸ்ரீநகர் : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது லியோ படம். படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் அறிவிக்கப்பட்டு காஷ்மீரில் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
காஷ்மீரில் தொடர்ந்து 60 நாட்கள் சூட்டிங் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் விஜய்யின் லியோ படம்
நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. இந்தப் படத்தில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அடுத்தடுத்த அப்டேட்கள்
இதுமட்டுமில்லாமல் கமலின் விக்ரம் படத்தையும் அதிரி புதிரி வெற்றியாக மாற்றியுள்ளார் லோகேஷ். இந்த காரணமும் லியோ படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. படத்தின் அப்டேட்டிற்காக நீண்ட மாதங்களாக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், வாரிசு படத்தின் ரிலீலை தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை படக்குழு வெளியிட்டது.

லியோ திருவிழா
படத்தின் டைட்டில், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் விவரங்கள் உள்ளிட்டவற்றை லியோ திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகின. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து தற்போது படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

காஷ்மீரில் சூட்டிங்
சூட்டிங்கிற்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்ற நிலையில், அங்கு நிலவிவரும் கடுமையான குளிர் காரணமாக படக்குழுவினர் மிகுந்த அவதிகளுக்கிடையில் சூட்டிங்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பின் இடையில் குளிர் காரணமாக அவதிப்பட்ட த்ரிஷா இடையில் சென்னை வந்த நிகழ்வும் நடைபெற்றது.

த்ரிஷா சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்
இதனிடையே படப்பிடிப்பின் இடையில் அடுத்தடுத்த சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை த்ரிஷா தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். படக்குழுவினருடனும் தனியாகவும் அவர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு பனிப்பொழிவின் இடையில் தனியாக அவர் புகைப்படத்தை வெளியிட்டார்.

த்ரிஷா படகு சவாரி
இந்நிலையில் தற்போது படக்குழுவினருடன் இணைந்து தால் ஏரியில் படகு சவாரி மேற்கொள்ளும் புகைப்படத்தையும் த்ரிஷா வெளியிட்டுள்ளார். பனிப்படர்ந்த சூழலில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் படக்குழுவினருடன் மிகவும் இயல்பாக போஸ் கொடுத்துள்ளார் த்ரிஷா.


Click it and Unblock the Notifications











