த்ரிஷாவின் தீபாவளி கொண்டாட்டம்.. இந்த முறையும் நாய் குட்டியா? கூட யார் இருக்காங்கனு பாருங்க!

சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் மூத்த நடிகைகளில் ஒருவராகவும் இப்பவர் நடிகை த்ரிஷா. இவர் தற்போது சூர்யாவின் கருப்பு படத்தில் நடித்து வருகிறார். படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது, இந்த படத்தில் இருந்து காட் மோட் என்ற பாடல் நேற்று படக்குழு தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது தீபாவளி கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை த்ரிஷா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் போஸ்ட்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வருடத்தின் சில நாட்களில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நாள் முழுவதும் கண்காணிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதாவது நடிகர் விஜய்யின் பிறந்த நாள் மற்றும் அதற்கு முன் தினம், அதன் அடுத்த நாட்களில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை கவனிப்பார்கள். திரைத்துறையில் யார் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினாலும், த்ரிஷாவின் வாழ்த்து மட்டும் எப்போதும் தனி கவனம் பெறுகிறது.

Trisha Shares Her Diwali Celebration Photos With Her Pet Animal And Grand Mother

தீபாவளி கொண்டாட்டம்: கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் காலத்தில் த்ரிஷாவின் வளர்ப்பு நாய் இறந்து விட்டது. அதன் பின்னர் அவர் தனது புது நாய்க்குட்டியின் புகைப்படத்தை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தனது புது நாய்க்குட்டியின் புகைப்படத்தை பகிர்ந்தார். இப்படி இருக்கையில் இவர் தற்போது தனது செல்ல நாய்க்குட்டியுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

த்ரிஷாவின் பாட்டி: அதாவது அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், " அவர் தனது நாய்க்கு எடுத்த தீபாவளி துணையை தனி புகைப்படமாகவும், தனது நாய் குட்டிக்கு அணிவித்து, அந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இப்படி இருக்கும்போது, மேலும் தனது நாய்க்குட்டியை கொஞ்சிக் கொண்டும் இருக்கிறார். மேலும் இந்த புகைப்படங்களுக்கு மத்தியில், தனது அம்மாவின் அம்மாவான சாரதா கணபதியின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். த்ரிஷா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

Trisha Shares Her Diwali Celebration Photos With Her Pet Animal And Grand Mother

More from Filmibeat

Read more about: diwali trisha த்ரிஷா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X