Trisha: செல்லம்.. எங்கிட்ட நீ வாலாட்டாதே.. இத்தோட நிறுத்திக்கோ.. கடுப்பாகி எச்சரித்த த்ரிஷா!
சென்னை: நடிகை த்ரிஷா மலையாள தயாரிப்பாளரை விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக திடீரென வதந்தி ஒன்று தேசியளவில் பரவிய நிலையில், அதிரடியாக அதுகுறித்து ட்வீட் போட்டு வெளுத்து வாங்கி உள்ளார் நடிகை த்ரிஷா.
20 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் த்ரிஷா விஜய்யின் லியோ படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் த்ரிஷா தான் ஹீரோயின் எனக் கூறுகின்றனர்.

மேலும், மலையாளத்தில் மோகன்லால், டொவினோ தாமஸ் உள்ளிட்ட டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். சில ஹீரோயின் சென்ட்ரிக் படங்களும் ரிலீஸுக்கு ரெடியாக காத்திருக்கின்றன.
இந்நிலையில், தன்னை பற்றிய திருமண வதந்தி காட்டுத் தீ போல பரவி வரும் நிலையில், அதிரடியாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது செம காட்டமாக த்ரிஷா போட்டுள்ள ட்வீட் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "DEAR "YOU KNOW WHO YOU ARE AND YOUR TEAM", "KEEP CALM AND STOP RUMOURING" CHEERS!" (செல்லம்.. நீயாரு.. உன் டீம் யாருன்னு தெரியுதா.. KEEP CALM அப்புறம் தேவையில்லாத வதந்தியை பரப்ப வேண்டாம்) என பதிவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக KEEP CALM என விஜய்யின் லியோ படத்திற்கு புரமோஷன் செய்யப்பட்டு வரும் நிலையில், அதே வார்த்தைகளை நடிகை த்ரிஷா போட்டு இருக்கும் நிலையில், விஜய் மற்றும் அவரது டீமுக்கான எச்சரிக்கையா? இது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், விஜய்யின் லியோ பட பாணியிலேயே நடிகை த்ரிஷா தனது ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்றும் த்ரிஷா அடுத்தடுத்து விஜய், அஜித் படங்களில் கமிட் ஆவது பிடிக்காமல் யாரோ செய்துள்ள சதிதான் என்றும் விஜய் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே த்ரிஷா குறித்து ஏகப்பட்ட வதந்திகள் சமூக வலைதளங்களில் வலம் வந்த நிலையில், பொறுமையாக இருந்து வந்த நடிகை த்ரிஷா தற்போது யாரையோ யாருடைய டீமையோ பின் பாயின்ட் செய்து விளாசியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. ஆனால், யாரை த்ரிஷா வச்சு வெளுத்து வாங்கியிருக்கிறார் என தெரியவில்லையே என ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.


Click it and Unblock the Notifications











