ஒரே கலர்.. ஒரே டிரெண்ட்.. த்ரிஷா சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்! குஷ்பு மகள் திருமணத்தில் செம ஸ்டைல் கச்சேரி

சென்னை: நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகாவின் திருமண கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. திருமணத்தை மிகவும் எளிமையாகவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையிலும் நடத்தி முடித்துள்ள நிலையில், தற்போது நடிகைகள் த்ரிஷா மற்றும் தமன்னா கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, திருமணத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பிரபலங்களும் ஒரே மாதிரியான கோல்டன் மற்றும் கிரீம் கலர் தீமை பின்பற்றியிருப்பது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

நடிகை குஷ்பு தனது மகள் அவந்திகாவுக்கும், ஸ்ரவண் ஸ்ரீனிவாசனுக்கும் கடந்த ஜூன் 25-ஆம் தேதி மிகவும் நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்திற்கு பிறகு புதுமண தம்பதியரின் புகைப்படங்களையும், குடும்ப புகைப்படங்களையும் பகிர்ந்து, மகளின் திருமணம் குறித்து மிகவும் உருக்கமான பதிவையும் வெளியிட்டிருந்தார். அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

Trisha Steals the Spotlight in Golden Theme at Khushbu s Daughter s Wedding Tamannaah Joins the Style Parade

குஷ்பு மகள் திருமண கொண்டாட்டம்: அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புதிய புகைப்படத்தில் நடிகை த்ரிஷா, தமன்னா, குஷ்பு, சுந்தர்.சி, புதுமண தம்பதியினர் அவந்திகா - ஸ்ரவண் உள்ளிட்டோருடன் இணைந்து மகிழ்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர். இதில் த்ரிஷா எளிமையான கோல்டன் சில்க் சேலையில் தோன்றியிருப்பதும், தமன்னாவும் அதே கலர் தீமுக்கு ஏற்ற பாரம்பரிய உடையில் கலந்து கொண்டிருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திருமண விழாவிற்காக அனைவரும் கிட்டத்தட்ட ஒரே நிறத்திலான உடைகளை தேர்வு செய்திருப்பது அந்த புகைப்படத்திற்கு மேலும் அழகை சேர்த்துள்ளது.

ஒரே கலர்: சமீப காலமாக திருமண விழாக்களில் "கலர் கோ-ஆர்டினேஷன்" டிரெண்ட் அதிகரித்து வரும் நிலையில், குஷ்பு குடும்பமும் அதையே பின்பற்றியிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் முதல் நெருங்கிய நண்பர்கள் வரை அனைவரும் ஒரே கலர் பேலட்டில் தோன்றியிருப்பது, இந்த திருமண புகைப்படங்களை இன்னும் பிரம்மாண்டமாக மாற்றியிருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trisha Steals the Spotlight in Golden Theme at Khushbu s Daughter s Wedding Tamannaah Joins the Style Parade

த்ரிஷா: இந்நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், "த்ரிஷா எப்போதும் போல எளிமையிலேயே அழகாக இருக்கிறார்", "தமன்னாவும் த்ரிஷாவும் ஒரே பிரேமில் செம காம்பினேஷன்", "கோல்டன் தீமில் முழு திருமணமும் கிளாஸாக இருக்கிறது", "குஷ்பு குடும்பத்தின் இந்த திருமண புகைப்படங்கள் நீண்ட நாட்களுக்கு பேசப்படும்" என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X