என்னை முழுமையாகப் புரிந்து கொள்பவருடன் காதல் திருமணம்.. நடிகை த்ரிஷா திடீர் கல்யாண தகவல்!
சென்னை: தனது திருமணம் காதல் திருமணமாகவே இருக்கும் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருபவர், முன்னணி நடிகை த்ரிஷா.
இப்போது தமிழ், மலையாளத்தில் நடித்து வரும் அவர் தனது திருமணம் பற்றி மீண்டும் கூறியுள்ளார்.

நின்றுபோனது திருமணம்
கடந்த சில வருடங்களுக்கு முன் தயாரிப்பாளர் வருண் மணியனை காதலித்தார் நடிகை த்ரிஷா. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திடீரென திருமணம் நின்றுபோனது. கருத்துவேறுபாடு காரணமாக நின்றுபோனதாக அப்போது கூறப்பட்டது. இது பரபரப்பாகப் பேசப்பட்டது.

காதலை ஒப்புக்கொண்டார்
பின்னர் பிரபல தெலுங்கு நடிகர், ராணா டக்குபதியை அவர் காதலிப்பதாகக் கூறப்பட்டது. இருவரும் விழாக்களுக்கு ஒன்றாகச் சென்று வருவது என இருந்தனர். வருண் மணியனை காதலிக்கும் முன்பே, ராணாவுடன் கிசுகிசுக்கப்பட்டார் த்ரிஷா. பின் திடீரென்று பிரிந்தனர். நடிகர் ராணா, இந்தி சேனல் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் இந்தக் காதலை ஒப்புக்கொண்டார்.

காதல் திருமணமாக
இந்நிலையில், நடிகர் ராணாவுக்கு மிஹீகா பஜாஜ் என்பவருடன் சில மாதங்களுக்கு முன் திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில் தனது திருமணம் பற்றி நடிகை த்ரிஷா மீண்டும் கூறியுள்ளார். அது காதல் திருமணமாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

புரிந்து கொள்பவர்
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: என் திருமணம் பற்றி முன்பே முடிவு செய்ததைத்தான் இப்போதும் சொல்கிறேன். என்னை முழுமையாகப் புரிந்து கொள்பவரை திருமணம் செய்து கொள்வேன். அது காதல் திருமணமாகவே இருக்கும். அப்படி ஒருவரை சந்திக்கும்போது திருமணம் நடக்கும். சிங்கிளாக இருப்பது பற்றி கவலைப் படவில்லை.

தெரு நாய்கள்
ஒரு வேளை அப்படி ஒருவரைச் சந்திக்கவில்லை என்றால், இப்படியே இருந்து விடுவேன். பள்ளியில் படிக்கும்போதே நான் மற்றவர்களுக்கு உதவுவேன். நாய்களை செல்லப் பிராணிகளாக அப்போதே ஏற்றேன். இப்போது 5 தெரு நாய்களை வளர்க்கிறேன். குதிரை ஏற்றம் பழகிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications