முரட்டுத்தனமாக நிற்கிறார் த்ரிஷா… ‘தி ரோட்‘ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் !

சென்னை : நடிகை த்ரிஷா நடிக்கும் தி ரோட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் த்ரிஷா.

அஜித், விஜய், விக்ரம், விஜய்சேதுபதி, மகேஷ்பாபு,மோகன்லால் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்துள்ளார்.

தி ரோடு

தி ரோடு

நடிகை த்ரிஷா தற்போது இயக்குநர் அருண் வசீகரன் இயக்கும் தி ரோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, மியா ஜார்ஜ், சார்பட்டா பரம்பரை பட பிரபலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

உண்மை சம்பவம்

உண்மை சம்பவம்

தி ரோடு திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது. அதிரடி, ஆக்ஷன் காட்சிகள் இத்திரைப்படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி ரோட் படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Recommended Video

'Trisha மாதிரி நடிச்சிருக்க முடியாது' - Manju Warrier Throw back Interview | Filmibeat Tamil
தி ரோடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தி ரோடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்நிலையில், நடிகை த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு தி ரோடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல, ஜீப்பின் முன் கையில் செய்தித்தாளுடன், முரட்டுத்தனமாக நிற்கிறார் த்ரிஷா. இணையத்தில் இந்த போஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

நடிகை த்ரிஷா மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. மேலும், இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லாலுடன் ராம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா, தற்போது பிருந்தா எனும் புதிய வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். இதில் த்ரிஷா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X