என்னுடைய வாழ்க்கையை மாற்றிய நாள்..21 ஆண்டு கால நினைவை பகிர்ந்த த்ரிஷா !

சென்னை : 96 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் பிஸியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா கையில் அரை டஜன் திரைப்படங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மாடல் அழகியாக வந்து பின் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த த்ரிஷா இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுவரை காதல் நாயகியாக மட்டும் த்ரிஷாவை பார்த்து வந்த ரசிகர்களை அதிரவைக்கும் வகையில் கொடி திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி இருந்த த்ரிஷா இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் லீட் ரோலில் நடித்து வருவதை தொடர்ந்து இப்பொழுது சோசியல் மீடியாவில் செப்டம்பர் 30 தனது வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட புகைப்படம் ஒன்றை நினைவுபடுத்தி பதிவிட்டுள்ளார்.

பல மொழிகளிலும்

பல மொழிகளிலும்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து இன்று வரை முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

வெளியாக தாமதமானதால்

வெளியாக தாமதமானதால்

மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கிய த்ரிஷா "மௌனம் பேசியதே" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். எனினும் அதற்கு முன்பாகவே இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய "லேசா லேசா" திரைப்படத்தில் நடித்திருந்த த்ரிஷாவுக்கு "லேசா லேசா" திரைப்படம் வெளியாக தாமதமானதால் " மௌனம் பேசியதே" அறிமுக திரைப்படமாக அமைந்தது.

அசுர வேகத்தில்

அசுர வேகத்தில்

மேலும் கதாநாயகியாக ஆவதற்கு முன்பே ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு பிரண்டாக நடித்திருந்த த்ரிஷா, அதைத் தொடர்ந்து நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் அடுத்தடுத்து வெற்றி பெற தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அசுர வேகத்தில் கலக்கி வந்தார்.

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்பொழுது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், ராங்கி, கர்ஜனை, ராம், சுகர், பரமபதம் விளையாட்டு என கையில் அரை டஜன் திரைப்படங்களுடன் செம பிஸியாக நடித்து வருகிறார்.

மகுடம் சூட்டினேன்

மகுடம் சூட்டினேன்

இந்நிலையில் 1990 களில் தனது வாழ்க்கையை மாடல் அழகியாக ஆரம்பித்த த்ரிஷா அதில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல விருதுகளை வென்ற நிலையில் செப்டம்பர் 30, 1999ஆம் நாள் "மிஸ் சென்னை" போட்டியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட த்ரிஷாவிற்கு அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை நினைவு படுத்தி கூறும் விதமாக அந்த புகைப்படத்தை இப்பொழுது பதிவிட்டு செப்டம்பர் 30ஆம் தேதி என்னுடைய வாழ்க்கையை மாற்றிய நாள் என 21 ஆண்டுகளுக்குப் பிறகு நெகிழ்ந்து கூறிய த்ரிஷாவிற்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் நடிகை குஷ்பூ "அந்த அழகிப்போட்டியில் வென்றதற்காக நான் தான் உனக்கு மகுடம் சூட்டினேன் என நினைக்கிறேன்" என பலரும் அறியாத தகவலைக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X