தல கூட சேர்ந்தா இப்படித் தானோ?: சொல்பேச்சு கேட்காத த்ரிஷா
சென்னை: ராங்கி படத்திற்காக த்ரிஷா துணிந்து ரிஸ்க் எடுக்கிறாராம்.
எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் படம் ராங்கி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே மாதம் வெளியானது. தற்போது வெளியாகியுள்ள செகண்ட் லுக் போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் பயங்கர சீரியஸாக போஸ் கொடுத்துள்ளார் த்ரிஷா.

பெயருக்கு ஏற்ப படத்தில் த்ரிஷா ராங்கியாக நடிக்கிறார். ராங்கி படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. சென்னை ஷெட்யூலை முடித்துக் கொண்ட படக்குழு அடுத்ததாக உஸ்பெகிஸ்தானுக்கு செல்ல உள்ளது.
செப்டம்பர் இரண்டாவது வாரம் உஸ்பெகிஸ்தானில் படப்பிடிப்பு நடத்துகிறார்களாம். அங்கு ஸ்டண்ட் காட்சியை படமாக்குகிறார்களாம். ரிஸ்கான ஸ்டண்ட் என்று கூறியும் டூப் இல்லாமல் நானே தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கிறாராம் த்ரிஷா.
எவ்வளவு ரிஸ்கான ஸ்டண்ட் காட்சியாக இருந்தாலும் டூப் போடாமல் நடிப்பது அஜித் ஸ்டைல். த்ரிஷாவும் அதையே பின்பற்றுகிறார்(நயன்தாராவை போன்றே த்ரிஷாவுக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித்). ராங்கி படத்தில் நடிக்க த்ரிஷா புல்லட் ஓட்டிப் பழகியுள்ளாராம். உஸ்பெகிஸ்தானில் படமாக்கப்படும் ஸ்டண்ட் காட்சி படத்திற்கு மிகவும் முக்கியமானதாம்.
ராங்கி படத்திற்கு ஏ. ஆர். முருகதாஸ் வசனம் எழுதியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் ராங்கி படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. நயன்தாரா நடித்து வருவது போன்று சீரியஸான கதாபாத்திரங்களை த்ரிஷாவும் தேர்வு செய்து வருகிறார்.
த்ரிஷாவுக்கும் நடிப்பு நன்றாக வரும் என்பதால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகமே இல்லை. இடையே டல்லடித்த த்ரிஷாவின் கெரியர் 96 படத்திற்கு பிறகு சூப்பராக பிக்கப் ஆகியுள்ளது.
சினிமா ரசிகர்களும் ஜானு, ஜானு என்று த்ரிஷாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் அவர் சாஃப்டான ஜானு கதாபாத்திரத்தில் இருந்து மாறுபட்ட ராங்கியாக மாறியுள்ளார். வாழ்த்துக்கள் ராங்கி.


Click it and Unblock the Notifications











