ரீமேக்காகும் மலையாள ஹிட் படம்... சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் முன்னணி நடிகை

சென்னை:தெலுங்கில் மெகா ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவி, 150 படங்களுக்கு மேல் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தற்போது இவர் 'ஆச்சார்யா' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Trisha to be romance with Chiranjeevi in Lucifer telugu remake

இந்த படத்தின் ரிலீசை எதிர்நோக்கி அவருடைய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 'ஆச்சார்யா' படத்தில் நடித்து முடித்த கையோடு, சிரஞ்சீவி மலையாள மெகா ஹிட் படமான 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மோகன் ராஜா இந்தப் படத்தை இயக்க உள்ளார். மேலும் லூசிபர் மலையாள வெர்ஷனில் , ஹீரோ மோகன்லாலுக்கு ஜோடி கிடையாது. காதல் காட்சிகள் எதுவும் இடம் பெற்றிருக்காது.

ஆனால் தெலுங்கு ரீமேக்கில், சிரஞ்சீவியின் ரசிகர்களை குஷிபடுத்துவதற்காக காதல் காட்சிகளை இணைக்க மோகன் ராஜா திட்டமிட்டுள்ளார். அத்துடன் தெலுங்கில், மலையாளத்தை விட கூடுதலாக ஆக்ஷன் காட்சிகளை வைக்கவும் மோகன் ராஜா திட்டமிட்டுள்ளார்.

இதனால் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க பிரபல தமிழ் நடிகை திரிஷாவை படக்குழு தேர்வு செய்துள்ளது. நடிகை தமன்னாவுடனும் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X