விஜய்க்கு ஜோடியாகும் த்ரிஷா..அட இது புது தகவலா இருக்கே..வருடங்களுக்குப் பிறகு இணையும் கூட்டணி!

சென்னை : தளபதி 67 திரைப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டு இருக்கும் விஜய் நடிப்பில் வெளியானத் திரைப்படம் பீஸ்ட்.

இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

வாரிசு

வாரிசு

விஜய் தற்போது இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் தெலுங்கு மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விஜய்யின் பிறந்த நாளுக்கு வெளியானது. தமிழ் தெலுங்கு என இரு மொழியில் வெளியாக உள்ள இப்படத்திற்கு தெலுங்கில் வாரிசுடு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தளபதி 67

தளபதி 67

வாரிசு திரைப்படத்தை அடுத்து விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார் என்று கூறப்பட்டு இருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் கமலின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த கமலின் விக்ரம். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து தளபதி 67 படத்தை இயக்க இருக்கிறார். அதற்கான அதிகார பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

த்ரிஷாவா?

த்ரிஷாவா?

இந்நிலையில், தளபதி 67 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அப்படி ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருந்தால் குருவி படத்துக்கு பின்னர் 13 ஆண்டுகள் கழித்து விஜய்யும் திரிஷாவும் இந்த படத்தின் மூலம் இணைய உள்ளார்கள்.

6 வில்லன்கள்

6 வில்லன்கள்

அதுமட்டும் இல்லாமல் சமந்தா வில்லியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் 6 வில்லன் இருப்பதாகவும் இதற்காக ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் பிரித்விராஜ், தெலுங்கு நடிகர் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மற்ற வில்லன் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X