Trisha: விஜய்யை தொடர்ந்து அஜித்தையும் வளைத்துப் போட்ட த்ரிஷா... இப்பவாவது அந்த ஆசை நிறைவேறுமா?

சென்னை: மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் த்ரிஷா.

முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ள த்ரிஷா, பொன்னியின் செல்வன் படம் மூலம் ரீ-என்ட்ரியாகியுள்ளார்.

பொன்னியின் செல்வனில் குந்தவையாக வசீகரித்த த்ரிஷா இப்போது லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் அவரே நாயகியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

 Trisha: Trisha is to share screen space with Ajith again in the VidaaMuyarchi film

அஜித்துடன் நெருங்கும் த்ரிஷா:மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவை காதலில் விழ வைத்த த்ரிஷா, அன்று முதல் 20 வருடங்களாக கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சில வருடங்களாக அவுட் ஆஃப் பீல்ட்டில் இருந்த த்ரிஷா, பொன்னியின் செல்வன் குந்தவையாக மீண்டும் ரசிகர்களை வசீகரித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து த்ரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

முக்கியமாக பல வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா. லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் விஜய்யுடன் ரொமான்ஸ் செய்து வரும் த்ரிஷா, 40 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் த்ரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Trisha: Trisha is to share screen space with Ajith again in the VidaaMuyarchi film

துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் தனது 62வது படத்தில் கமிட்டாகியுள்ளார். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதனால் அடுத்தடுத்து விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி படத்தில் அஜித் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கலாம் என முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது த்ரிஷாவை இந்தப் படத்தில் கொண்டுவர படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். இதுகுறித்து த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஆனாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னவோ ஒன்றே ஒன்று தான்.

 Trisha: Trisha is to share screen space with Ajith again in the VidaaMuyarchi film

ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய நான்கு படங்களில் அஜித் - த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப் படங்களின் க்ளைமேக்ஸில் அஜித் - த்ரிஷா இருவருமே பிரிந்துவிடுவதாக தான் முடிவு இருந்தது. அதனால், விடாமுயற்சி படத்திலாவது அஜித் - த்ரிஷா ஜோடி சேர்வதாக க்ளைமேக்ஸ் இருக்கவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளது குறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகவுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X