38வது பிறந்தநாள் காணும் சௌத் குயின்.. CDP வெளியிட்டு வாழ்த்தும் ரசிகர்கள்

சென்னை: 1999ம் ஆண்டு மிஸ் சென்னை ஆக தேர்வு செய்யப்பட்டு தமிழில் நடிகையாக அறிமுகமானவர் த்ரிஷா.

நடிக்க தொடங்கியது முதல் இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையாத நடிகையாக உள்ளார் த்ரிஷா.

சௌத் குயினாக திகழும் த்ரிஷா இப்போதும் தமிழில் முன்னனி நடிகையாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மனதில் நிற்கிறார்

மனதில் நிற்கிறார்

ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார் த்ரிஷா. கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா, அபியும் நானும், என்னை அறிந்தால், 96 என அவ்வப்போது ரசிகர்கள் மனதில் நிற்கும் படியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து விடுபவர் த்ரிஷா.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

இந்த ஆண்டு த்ரிஷா நடிப்பில் வெளியான படம் பரமபதம் விளையாட்டு. திருஞானம் இயக்கத்தில் நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. த்ரிஷாவுக்கு சற்று பின்னடைவு என்றாலும் அவரின் அடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இதுமட்டுமின்றி இந்த ஆண்டில் த்ரிஷாவின் நடிப்பில் ராங்கி, குற்றப்பயிற்சி ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. ஏற்கனவே ஆக்ஷன் த்ரில்லர் படமான ராங்கி படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியது. இதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார் த்ரிஷா. த்ரிஷாவின் அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே ரசிகர்களிடம் உள்ளது.

காமன் DP வெளியீடு

காமன் DP வெளியீடு

38வது பிறந்தநாள் காணும் சௌத் குயின் த்ரிஷாவிற்கு அவரின் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் காமன் DP வெளியிட்டு ட்விட்டரில் #HBDSouthQueenTRISHA எனும் ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: trisha திரிஷா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X