96 படத்திற்காக த்ரிஷா எத்தனை விருதுகள் வாங்கியிருக்காரு தெரியுமா.. அவரே போட்ட ட்வீட்டை பாருங்க!

Recommended Video

66th Filmfare awards 2019 | Trisha 11 Awards for 96 movie

சென்னை: இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான 96 படம் ரசிகர்கள் மனங்களை வென்றது மட்டுமின்றி, பல விருது விழாக்களில் தொடர்ந்து விருதுகளையும் குவித்து வருகிறது.

சமீபத்தில் 96 படத்தில் நடித்த த்ரிஷாவுக்கு சிறந்த நடிகை விருது 66வது ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் வழங்கப்பட்டது.

96 படத்தில் ஜானுவாக நடித்த த்ரிஷா அந்த படத்திற்காக பெற்ற மொத்த விருதுகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

96

96

பிரேக் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா, ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான 96 படம் ரசிகர்களின் பழைய நினைவுகளை கிளறியது. நட்பு வட்டம், முதல் காதல், காதல் பிரிவு, முதல் காதலை மீண்டும் சந்திக்கும் தருணம், காதலில் கண்ணியம், ரம்மியமான பாடல்கள் என பல அழகான விஷயங்கள் 96 படத்தில் இருந்ததால் பலரும் அந்த படத்தை ரசித்துப் பார்த்தனர். ராம் மற்றும் ஜானுவாக விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் வேற லெவல் நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியது தான் படத்தின் வெற்றி.

11 விருதுகள்

96 படத்தில் மஞ்சள் நிற சுடிதாரை போட்டுக் கொண்டு ஜானுவாக நடித்து ஜெஸ்ஸி த்ரிஷாவை மறக்கடிக்கும் அளவுக்கு நடித்திருந்தார் நடிகை த்ரிஷா. இந்த படத்திற்காக அவருக்கு இதுவரை 11 விருதுகள் கிடைத்துள்ளன. அந்த விருதுகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை த்ரிஷா.

ஹே ஜூட்

ஹே ஜூட்

தமிழில் ஜானுவாக கலக்கிய நடிகை த்ரிஷா, மலையாளத்தில் வெளியான ஹே ஜூட் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த படத்தில் நடித்ததற்காகவும் நடிகை த்ரிஷா 3 விருதுகளை இதுவரை பெற்றுள்ளார். அந்த விருதுகளும் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

பள்ளி நினைவுகள்

நடிகை த்ரிஷா தனது விருதுகளுடன் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு கீழே பலர் வாழ்த்தியும், சிலர் ட்ரோல் செய்தும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த ரசிகருக்கு, படத்தை பார்த்து தனது பள்ளி நினைவுகள் வந்ததாக தெரிவித்துள்ளார். விஜய்சேதுபதி - த்ரிஷா நடிப்பு கெமிஸ்ட்ரி சூப்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜானு & க்ரிஸ்டல்

96 படத்தில் ஜானுவாகவும், ஹே ஜூட் படத்தில் க்றிஸ்டலாகவும் நடித்து கம்பேகி ஆகியிருந்த நடிகை த்ரிஷாச்வின் நடிப்பை பாராட்டி இந்த ரசிகர் போட்டோ கமெண்ட் போட்டுள்ளார்.

17 ஆண்டுகள்

2002ம் ஆண்டு வெளியான மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை த்ரிஷா 17 ஆண்டுகளாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தற்போதும் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில், த்ரிஷாவின் 17 ஆண்டுகால திரைப்பயணம் ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு டிரெண்ட் செய்யப்பட்டது.

ராசியப்பன் பாத்திரக் கடை

த்ரிஷாவின் விருதுகளை பார்த்து ராசியப்பன் பாத்திரக் கடை என்ற வடிவேலுவின் காமெடி மீம் போட்டு இந்த நெட்டிசன் ட்ரோல் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X