ட்விட்டர் கணக்கு முடக்கம்... ரசிகர்களுக்கு திரிஷா முக்கிய வேண்டுகோள்!
நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்
சென்னை: நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் கணக்கு முடக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கபடுவது வாடிக்கையாகி விட்டது. சமீபத்தில் நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டதாக தெரிவித்தார்.

சீமராஜா டீசர் வெளியானபோது சிவகார்த்திக்கேயனை கிண்டல் செய்வதுபோல ஒரு ட்வீட் அருண்விஜய் கணக்கிலிருந்து வந்தது. அதை மறுத்த அவர், தன்னுடைய ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இப்போது த்ரிஷாவின் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக த்ரிஷா தெரிவித்துள்ளார். இத்தனை வருடங்களில் கிடைக்காத அன்பும் பாராட்டுக்களும் 96 திரைப்படம் ரிலீசான பிறகு த்ரிஷாவுக்கு கிடைத்து வருகிறது.
ஜானு ஜானு என ரசிகர்கள் உருக ஆரம்பித்துவிட்டனர். இப்போது ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்திலும் த்ரிஷா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தோன்றுவதாகவும், அவருடைய ட்விட்டர் ஹேண்டிலிலிருந்து எதாவது மெஸ்ஸேஜ் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் ட்வீட் செய்துள்ளார். அதற்கு ரசிகர்கள் சிலர் யாருடா அது த்ரிஷா அக்கவுண்டிலிருந்து ட்வீச் செய்வது என பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications