இணையத்தில் உலா வரும் த்ரிஷா - வருண் மணியன் நெருக்கமான படம்!
த்ரிஷா - வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் என நேற்று செய்தி வெளியானபோது, மீடியா உலகுக்கே இது உண்மையா பொய்யா என சந்தேகம்.
இன்னொரு பக்கம் அவரது தாயார் உமா கிருஷ்ணன் அப்படி எதுவும் நடக்கவில்லையே என சொல்லி வந்தார்.
இந்த நிலையில் த்ரிஷாவும் வருண் மணியனும் மிக நெருக்கமாக உள்ள ஒரு புகைப்படம் வெளியாகி, இருவருக்குமான உறவை உறுதி செய்தது.

மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட புகைப்படம் அது. இந்த படத்தை வைத்தே த்ரிஷா - வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் குறித்து செய்திகள் வெளியாகின.
இந்தப் படம் குறித்து ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை த்ரிஷாவும் அவர் தாயாரும்.
மாறாக திருமண நிச்சயதார்த்த செய்தியை மறுத்துள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications