விடாமுயற்சி படத்தில் த்ரிஷா வில்லியா? அஜித்தை போட்டுத்தள்ள சொன்னதே அவர் தானா?

சென்னை: லைகா நிறுவனம் தயாரித்துள்ள விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் அஜித்குமார். த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படம் இன்று தியேட்டரில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இப்படம் பார்த்த பிரபலம் ஒருவர் விடாமுயற்சி படத்தில் த்ரிஷா தான் வில்லி என்ற உண்மையை உடைத்து இருக்கிறார்.

2023ம் ஆண்டு அஜித்தின் துணிவு படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அதைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என அனைவரும் காத்திருந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்ற அறிவிப்பு வெளியானது.இதைத்தொடர்ந்து, 2023ம் ஆண்டு அஜித்தின் பிறந்த நாள் அன்று விடாமுயற்சி படத்தின் டைட்டில் வெளியானது. அதைத்தொடர்ந்து அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடந்து வருவதாக அறிவிக்கப்பட்டது.

vidaamuyarchi trisha ajithkumar

விடாமுயற்சி: அதன் பிறகு 'விடாமுயற்சி' படம் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை, இதனால் படத்தின் அப்டேட்டை கேட்டு கேட்டு ரசிகர்கள் அலுத்துப்போன நிலையில், பல்வேறு சிக்கல்களை கடந்து இன்று உலகமெங்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதனை அஜித் ரசிகர்கள் திருவிழாப்போல கொண்டாடி வருகிறார்கள். முதல் காட்சி இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு அமெரிக்காவில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கான மாநிலத்தில் வெளியானது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. மற்ற மாநிலத்தில் படம் வெளியாகிவிட்டதால், படம் குறித்த விமர்சனங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

த்ரிஷா வில்லியா: இந்நிலையில், படம் பார்த்த பிக் பாஸ் பிரபலமும் திரைப்பட விமர்சகருமான அபிஷேக் ராஜா, விடாமுயற்சி படத்தின் வில்லியே த்ரிஷா தான் என்ற விஷயத்தை கூறி ரசிகர்களிடம் ஹைப்பை அதிகரித்து இருக்கிறார். அது உண்மை என்பது போல அஜித்திற்கும் த்ரிஷாவிற்கும் இடையே கருச்சிதைவு ஏற்படுவதால் பிரச்சனை உருவாகி அது விவாகரத்து வரை செல்கிறது. இந்த நேரத்தில் அஜித்தை கொல்ல சில முயற்சிகள் நடக்கிறது. அஜித்தை கொல்ல சொன்னது யார் என்று பார்க்கும் போது, அது த்ரிஷா என்று தெரியவருகிறது. கொடி படத்திற்கு பிறகு த்ரிஷா, இந்த படத்தில் நெக்டிவ் ரோலில் நடித்து இருக்கிறார்.

ஆனால், இடைவேளைக்கு பிறகு, கதையில் சில மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தை மக்களுக்கு ஏற்ப படக்குழுவினர் சில மாற்றங்களை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த காட்சியைப் பார்த்த அஜித் ரசிகர்கள் த்ரிஷாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X