Trisha - லியோ ரிலீஸ்... விடாமுயற்சியை விட்டு வந்த த்ரிஷா.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: Trisha (த்ரிஷா) லியோ படம் இன்று ரிலீஸாகி விஜய் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 900 ஸ்க்ரீன்களில் படம் ரிலீஸாகியிருப்பதாக கூறப்படுகிறது. லியோ ரிலீஸை விஜய் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர்.

Trisha Watched Leo in Rohini Theatre

முதல் நாள் முதல் காட்சி: சிறப்பு காட்சியாக 7 மணிக்கு எப்படியாவது படத்தை திரையிட பட தயாரிப்பு தரப்பு எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் தமிழ்நாடு அரசின் அனுமதி கிடைக்காததால் 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. 9 மணிக்குதான் காட்சி என்றால் அதற்கு முன்னதாகவே தியேட்டர் வாசலில் ரசிகர்கள் குழும ஆரம்பித்தனர். பட்டாசு வெடித்து ரகளையாக கொண்டாடிவிட்டு தியேட்டருக்குள் சென்றனர் ரசிகர்கள்.

விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்: முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படம் தங்களுக்கு பரம திருப்தியை தந்திருப்பதாகவும் லோகேஷ் கனகராஜின் மேக்கிங் விஜய்யின் நடிப்பு அன்பறிவ் மாஸ்டர்ஸின் சண்டை காட்சி என அனைத்துமே அட்டகாசமாக இருப்பதாக பூரிக்கின்றனர். அதுமட்டுமின்றி படத்தின் லொக்கேஷன் பெரிய ப்ளஸ் எனவும் கூறுகின்றனர்.

விஜய் த்ரிஷா கெமிஸ்ட்ரி: படத்தின் இன்னொரு முக்கிய விஷயமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்னவென்றால் அது விஜய் - த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி. இருவரும் குருவி படத்துக்கு பிறகு பல வருடங்கள் கழித்து இதில் இணைந்து நடித்திருக்கின்றனர். இருவரையும் ஒன்றாக ஸ்க்ரீனில் பார்த்த ரசிகர்கள் தங்களது நாஸ்டாலஜியா நினைவுகளுக்கு சென்று கொண்டாடினர்.

ரோகிணியில் த்ரிஷா: இந்நிலையில் லியோ திரைப்படம் இன்று வெளியானதையொட்டி த்ரிஷா சென்னை ரோகிணி தியேட்டரில் படம் பார்த்தார். ப்ளூ ஜீன்ஸ், ஒயிட் டி ஷர்ட்டில் படு கேஷுவலாக வந்திருந்த அவர் தியேட்டரில் இருந்த ரசிகர்களுக்கு கையசைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

த்ரிஷா தற்போது அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துவருவதாக கூறப்படுகிறது. இதற்கான ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்துவந்தது. லியோ படத்துக்காக த்ரிஷா விடாமுயற்சியை விட்டு வந்தாரா இல்லை மிலன் உயிரிழப்பால் விடாமுயற்சி ஷூட்டிங்கிற்கு பிரேக் விடப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பிவருகின்றார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X