Trisha - மன்சூர் அலிகானின் ஆபாச பேச்சு ஒருபக்கம்.. மறுபக்கம் த்ரிஷாவுக்கு அடித்த செம ஜாக்பாட்..

சென்னை: Trisha (த்ரிஷா) மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய சர்ச்சை கோலிவுட்டில் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் பல வருடங்கள் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. எத்தனை வருடங்கள் ஆனாலும் அவரது அழகும் திறமையும் கூடிக்கொண்டே செல்கிறது. இடையில் அவருக்கான டிமாண்ட் குறைந்தாலும் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் ஏற்றிருந்த குந்தவை கதாபாத்திரம் த்ரிஷாவை மீண்டும் லைம் லைட்டில் கொண்டு வந்து நிறுத்தியது. அதில் அவரது நடிப்பையும், அழகையும் பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடினர்.

Trisha Will Act With Allu Arjun in 300 Crore Budget Movie

லியோ: அந்தப் படத்துக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவான லியோ படத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. அந்தப் படமும் வசூல் ரீதியாக ஹிட்டடித்தது. அதிலும் விஜய் - த்ரிஷா கெமிஸ்ட்ரி எத்தனை வருடங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும் என்பதற்கு லியோ படம் ஒரு உதாரணம் எனவும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறிவருகின்றனர். அவர்கள் சொல்வதுபோல்தான் படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி இருந்தது.

விடாமுயற்சி: லியோ படத்தில் நடித்து முடித்த த்ரிஷா அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடித்துவருகிறார். இந்தப் படமும் சூப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் ஏகே மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கிடையே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் தனது கவனத்தை தீவிரமாக செலுத்திவருகிறார் நடிகை த்ரிஷா.

செம லைன் அப்: இவை தவிர மணிரத்னம் கமல் ஹாசனை வைத்து இயக்கும் தக் லைஃப் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் த்ரிஷா நடித்த ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களிலும் த்ரிஷாவுக்கான ஸ்பேஸ் நன்றாகவே இருந்தது. எனவே தக் லைஃப்பிலும் அவருக்கான ஸ்க்ரீன் ஸ்பேஸ் அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சை: சூழல் இப்படி இருக்க மன்சூர் அலிகான் சமீபத்தில் த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசியது கோலிவுட்டில் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் த்ரிஷா நடிக்கவிருக்கும் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தெலுங்கில் அல்லு அர்ஜுனை வைத்து திரி விக்ரம் இயக்கும் படத்தில் த்ரிஷா கமிட்டாகியிருப்பதாகவும் அந்தப் படத்தின் பட்ஜெட் மட்டுமே 300 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஹிந்தியில் மீண்டும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறாராம் த்ரிஷா. அந்தவகையில் சல்மான் கானுடன் ஒரு படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாகவும் கண்டிப்பாக அந்தப் படத்தை த்ரிஷா ஒத்துக்கொள்வார் என்ற பேச்சுக்களும் எழுந்திருக்கின்றன. ஒருபக்கம் மன்சூர் அலிகான் சர்ச்சை ஓடிக்கொண்டிருக்க மறுபக்கம் தன்னுடைய கரியரில் வேகமாக ஓட ஆரம்பித்திருக்கிறார் த்ரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X