Trisha: மலையாளத்தின் 100 கோடி நாயகன்.. டொவினோ தாமஸ் உடன் ஜோடி சேரும் த்ரிஷா.. அப்போ விடாமுயற்சி?

திருவனந்தபுரம்: தமிழ், தெலுங்கு மொழிகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து அசத்தி வரும் நடிகை த்ரிஷா மலையாளத்தில் இதுவரை ஹே ஜூட் எனும் ஒரே ஒரு படத்தில் நிவின் பாலி உடன் இணைந்து நடித்துள்ளார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் ராம் படத்தில் நடித்து வரும் த்ரிஷா அடுத்ததாக டொவினோ தாமஸ் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Trisha will join with Tovino Thomas next movie Identity talks going on

நடிகர் விஜய்யின் லியோ படத்தை முடித்து விட்டு டொவினோ தாமஸ் நடித்து வரும் ஐடென்டிடி படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

நம்பர் ஒன் இடம்: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கோலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து இருந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அந்த இடத்தை அசால்ட்டாக தூக்கிய த்ரிஷா அடுத்ததாக விஜய்யுடன் லியோ படத்திலும் நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பாகங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில், அடுத்ததாக லியோ ரிலீசுக்காக காத்திருக்கிறார் த்ரிஷா. நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு காஷ்மீரில் அவருடன் எடுத்துக் கொண்ட சூப்பரான போட்டோவை ஷேர் செய்து வாழ்த்தி விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார்.

டொவினோ தாமஸ் படத்தில்: தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் நடித்து வரும் த்ரிஷா மலையாளத்தில் ஹே ஜூட் படத்தில் நடித்துள்ளார். விரைவில் மோகன்லால் உடன் அவர் நடித்த ராம் படம் 3 ஆண்டுகளாக உருவாகிக் கொண்டே இருக்கிறது. எப்போது வெளியாகும் என தெரியவில்லை.

சோலோ ஹீரோயினாக ராங்கி படத்தில் நடித்த த்ரிஷா விரைவில் தி ரோடு படத்தின் ரிலீசுக்காகவும் காத்திருக்கிறார். இந்நிலையில், மலையாளத்தில் சமீபத்தில் 2018 மூலம் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த டொவினோ தாமஸ் நடித்து வரும் ஐடென்டிடி படத்தில் ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே டொவினோ தாமஸ் நடித்து ஹிட் அடித்த ஃபாரன்சிக் படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களான அகில் பால் மற்றும் அனாஸ்கான் இந்த படத்தை இயக்கி வருகின்றனர்.

Trisha will join with Tovino Thomas next movie Identity talks going on

அப்போ விடாமுயற்சி: மே மாதம் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், ஜூன் மாதம் போயி ஜூலை மாதமே வந்துடுச்சு ஆனால், இன்னமும் அஜித்தின் விடாமுயற்சி படம் எப்போ ஆரம்பிக்கும் என்றே தெரியவில்லை.

இயக்குநர் விக்னேஷ் சிவனை வெளியே அனுப்பி விட்டு மகிழ் திருமேனியை உள்ளே லாக் செய்தும் இன்னமும் ஷூட்டிங் ஆரம்பிக்கவில்லை. இந்நிலையில், நடிகை த்ரிஷா தான் அந்த படத்தின் ஹீரோயின் என்றும் பேச்சுவார்த்தைகள் அடிபட்டன. இந்நிலையில், அடுத்ததாக டொவினோ தாமஸ் உடன் த்ரிஷா ஜோடி போட்டு நடித்தால் விடாமுயற்சி படத்தில் நடிப்பாரா? என்கிற கேள்வியும் கிளம்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X