Vijay Trisha: விஜய்யின் எல்லா கனவுகளும் கைகூடனும்.. வெட்கத்தோடு வாழ்த்து சொன்ன த்ரிஷாவின் வீடியோ!

சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து அவருக்கு பலரும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இப்படி இருக்கையில் 2025ஆம் ஆண்டு சைமா விருதுகள் நிகழ்ச்சியில் பெரிய எல்.இ.டி திரையில் நடிகர் விஜய்யின் புகைப்படத்தை போட்டுக் காட்டி, அவரிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் என்ன கேட்பீர்கள் த்ரிஷா என்று கேட்டதற்கு வெட்கத்தோடு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் ஆன் ஸ்கிரீன் ஜோடிகள் என்றால் அதில் விஜய் - த்ரிஷாவுக்கு எப்போதும் இடம் உண்டு. இவர்கள் இருவரும் இணைந்து முதன் முதலாக நடித்த கில்லி படத்தில் தொடங்கி கடைசியாக நடித்த லியோ வரை இவர்கள் கூட்டணிக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. ஆன் ஸ்கீரின் இவர்கள் இருவரும் செம ஜோடி என்றால் ஆஃப் ஸ்கிரீனில் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளார்கள். இதனை பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள். அதாவது இவர்கள் இருவருக்கும் இடையில் இருப்பது நட்பு மட்டும் இல்லை என்று வலைபேச்சு அந்தணன் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

இப்படி இருக்கும்போது, விஜய் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பின்னர் கூட நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு நடிகை த்ரிஷாவுடன் பிரைவேட் ஜெட்டில் கோவாவிற்கு சென்றது தொடர்பான வீடியோக்களும், இருவரும் தனியாக லிஃப்ட்டில் இருப்பது, த்ரிஷாவின் நாய்க் குட்டியை நடிகர் விஜய் கையில் வைத்துக் கொண்டாடிக் கொண்டு இருப்பது போன்ற புகைப்படம் என இந்த சர்ச்சைகளுக்கு தீனி போடும் விதமாக அமைந்தது.

வெட்கத்தில் த்ரிஷா: இந்நிலையில் சைமா விருதுகள் நிகழ்ச்சியில் விஜய்யின் புகைப்படத்தை பெரிய எல்.இ.டி திரையில் போட்டு அவரிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் என்ன கேட்பீர்கள் என்று கேட்டதற்கு, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். குறிப்பாக விஜய்யின் புகைப்படத்தை பார்த்ததும் ஏற்பட்ட ஆரவாரம் அரங்கை சில நிமிடங்களுக்கு அதிர வைத்தது.

Trisha Wishes To tvk Vijay At SIIMA 2025 For To His Political Journey - Watch

த்ரிஷா வாழ்த்து: விஜய்யின் புகைப்படத்தை எதிர்பார்க்காத த்ரிஷா, விஜய்யின் புகைப்படத்தை பார்த்ததும் வெட்கத்தில் சிரிக்கத் தொடங்கினார். இதனால் ரசிகர்கள் ஆரவாரம் மேலும் அதிகரித்தது. வெட்கத்தில் சிரித்துக் கொண்டு இருந்த நடிகை த்ரிஷா ஒரு கட்டத்தில் பேசத் தொடங்கினார். அதாவது, " விஜய்க்கு அறிவுரை எல்லாம் சொல்ல வேண்டியது இல்லை, ஆனால் வாழ்த்து சொல்லாம் என்று இருக்கிறேன். விஜய் இப்போது புதிய பயணத்தை தொடங்கி உள்ளார். அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவும், அவரது கனவுகள் எல்லாம் நனவாகவும் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார். த்ரிஷா வெட்கத்தோடு விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Trisha Wishes To tvk Vijay At SIIMA 2025 For To His Political Journey - Watch

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X