»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை த்ரிஷா நிர்வாணமாகக் குளிப்பதை படம் எடுத்து இன்டர்நெட்டிலும் செல்போன்களிலும் உலவ விட்டுள்ளதாக பரபரப்புகிளம்பியுள்ளது.

இதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று த்ரிஷா போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

த்ரிஷாவைப் பற்றிய வதந்திகளுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. முதலில் த்ரிஷாவுக்கும் சிம்புவுக்கும் காதல் என்றார்கள். பின்பு, லைன்மாறிவிட்டது, இப்போது இயக்குனர் ஜோதி கிருஷ்ணாவைக் காதலிக்கிறார் என்றார்கள்.

அடுத்து அப்பாவை வீட்டை விட்டு துரத்தினார், இரவு நேரங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டு சரக்கு அடிக்கிறார்,தற்கொலை செய்து கொண்டார் என்று வதந்திகள் வந்தவண்ணம் இருந்தன.

சினிமாவில் நடிப்பதை முழுநேர வேலையாகவும், வதந்திகளுக்கு மறுப்பு தெரிவிப்பதை பகுதி நேர வேலையாகவும் த்ரிஷா செய்துவந்தார். இந் நிலையில்தான் இப்போது புதிதாக ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது.

நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் த்ரிஷா நிர்வாணமாகக் குளிப்பது போன்ற ஒரு காட்சியை இன்டர்நெட்டில் சிலர் வெளியிட்டுள்ளனர். இந்தக்காட்சி சுமார் 3 நிமிடம் ஓடுகிறது. கடந்த ஒரு மாதமாக இ-மெயில் மூலமாக உலகம் முழுவதும் பரவிவிட்ட இந்தக் காட்சி மிக தாமதமாகத்தான் தமிழக மக்களின் கவனத்துக்கு வந்துள்ளது.

இதுபற்றி தமிழகத்தின் முன்னணி புலனாய்வு இதழ் செய்தி வெளியிட, இப்போது த்ரிஷா மேட்டர் இன்டர்நெட்டைத் தாண்டிபத்திரிக்கைகளில் பற்றி எரிகிறது.

அந்த கிளிப்பிங்கில், த்ரிஷா போன்ற சாயலுடன் பூப்போட்ட டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் அணிந்த பெண் ஒருவர் குளியலறைக்குள் நுழைகிறார்.ஒவ்வொரு ஆடையாக அவிழ்த்து விட்டு, ஷவரைத் திறக்க முயற்சிக்கிறார்.

ஷவர் டைட்டாக இருக்கிறது. அதை சிறிது நேர சிரமத்திற்குப் பின் திறக்கிறார். ஷவருக்கு உடம்பைக் காட்டியபடி குளிக்க ஆரம்பிக்கிறார்.இந்தக் குளியல் காட்சி மொத்தம் 3 நிமிடம் ஓடுகிறது.

இதை ஒரு நீள்வட்ட துளை வழியாக படமாக்கியுள்ளார்கள்.

த்ரிஷா புகார்:

இது குறித்து த்ரிஷா ஹைதராபாத் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இதை வெளியிட்டவர்களைக் கண்டுபிடித்துதண்டிக்குமாறு புகாரில் கூறியுள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் த்ரிஷா கூறியதாவது:

இது குறித்து நிறைய பேர் என்னிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். மூளை இல்லாதவர்கள் செய்த காரியம் இது. நான் நடித்தபடங்கள் நன்றாக ஓடுவதால் எனக்குக் கிடைத்துள்ள நல்ல பெயரைக் கெடுக்க சிலர் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பிரபலம் ஆகிவிட்டால் இதுபோன்ற வேதனைகளை தாங்க வேண்டியுள்ளது. ஈவு இரக்கம் இல்லாதவர்கள் தான் இதையெல்லாம்செய்கிறார்கள் என்று வேதனையுடன் கூறினார்.

அம்மா மறுப்பு:

முன்னதாக அந்த வீடியோவில் இருப்பது த்ரிஷாவே அல்ல என அவரது தாயார் உமா திட்டவட்டமாக மறுத்தார். அவர் கூறியதாவது:

ஏற்கனவே இதுகுறித்து விளக்கம் கூறிவிட்டேன். இப்படி ஒரு காட்சி இன்டர்நெட்டில் உலவுவதாக எனக்கும் செய்தி வந்தது. நானும்அதைப் பார்த்தேன்.

அதில் இடம்பெற்றிருப்பது எனது மகள் அல்ல. அவளின் அங்க அடையாளங்கள் எனக்கு நன்றாகத் தெரியும். த்ரிஷா எப்போதும் ஷவரில்குளிக்க மாட்டாள். பாத் டப்பில் தான் குளிப்பார்.

அந்தக் காட்சியில் இடம்பெற்றிருப்பது போன்ற உடைகள் அவளிடம் கிடையாது. மேலும் உடைகளை எப்போதும் தூக்கி எறிய மாட்டாள்.த்ரிஷாவின் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் தான் இந்த வேலையைச் செய்துள்ளார்கள்.

த்ரிஷா தற்கொலை செய்து கொண்டார் என்ற வதந்தியைப் போலத்தான் இதுவும் என்று கூறினார்.

எங்கே போகிற போக்கைப் பார்த்தால், வதந்திகளுக்கு மறுப்பு தெரிவிப்பதே த்ரிஷாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் முழுநேரவேலையாகி விடும் போலிருக்கிறதே!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil