திரைத் துளி
நடிகை த்ரிஷா குறித்து வெளியான செய்தி தொடர்பாக அவரது தாயார் உமா கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேல், நெற்றிக்கண்வாரப்பத்திரிக்கை ஆசியர் அண்ணாமலை மணி கைது செய்யப்பட்டார்.
த்ரிஷா குளிப்பது போன்ற காட்சிகள் இணைய தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த படங்களில் இருப்பதுநான் அல்ல என்று த்ரிஷா விளக்கமளித்தார்.
இதுதொடர்பாக ஹைதராபாத் ஆணையரிடம் புகார் கொடுத்திருந்தார்.
இந் நிலையில் நெற்றிக்கண் வாரப் பத்திரிக்கையின் டிசம்பர் 31ம் தேதியிட்ட இதழில் த்ரிஷா குளியல் தொடர்பான கட்டுரைவெளியாகியிருந்தது.
அதில் த்ரிஷா ஷவரில் குளிப்பது போன்ற படத்துடன் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. ஈ மெயில் ஒன்றிலிருந்து இந்தப் படம்எடுக்கப்பட்டதாகவும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துநெற்றிக்கண் ஆசிரியர் அண்ணாமலை மணியை கைது செய்தனர்.
அவர் மீது ஆபாச புத்தகங்களை விற்றது, கட்டாய தணிக்கை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு, 3,700 நெற்றிக்கண் புத்தகங்களையும், போஸ்டர்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.


Click it and Unblock the Notifications











