»   »  போலி த்ரிஷா ஆபாச விசிடிக்கள் பறிமுதல் !

போலி த்ரிஷா ஆபாச விசிடிக்கள் பறிமுதல் !

Subscribe to Oneindia Tamil

நடிகை த்ரிஷாவைப் போன்ற தோற்றம் கொண்ட பெண்ணை வைத்து எடுக்கப்பட்ட ஆபாச விசிடிக்களை ஹைதராபாத்போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹைதராபாத் நகரில் உள்ள போரபந்தா என்ற பகுதியில் போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிவக்குமார்என்பவரது விசிடி கடையில் ஏராளமான திருட்டு விசிடிக்களைப் போலீஸார் பறிமுதல் செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்டவற்றில், 6 ஆபாச விசிடிக்கள் ஆகும். இவற்றில் நடிகை த்ரிஷாவைப் போல காணப்படும் ஒரு பெண்ஆபாசமாக நடித்துள்ளார். இந்த விசிடியை மல்லேஷ் என்பவர்தான் தனக்குக் கொடுத்ததாக சிவக்குமார் போலீஸாரிடம்தெரிவித்தார்.

இதையடுத்து மல்லேஷின் கடையிலும் போலீஸார் சோதனையிட்டனர். அப்போது சென்னையிலிருந்து இந்த விசிடிக்கள்வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து மல்லேஷின் கடையிலிருந்து 153 ஆபாச விசிடிக்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.


அனரா குப்தா: போலியும் நிஜமும்

த்ரிஷா தவிர மிஸ் காஷ்மீர் அழகியான அனாரா குப்தா போன்ற தோற்றம் உடைய பெண்ணின் ஆபாச விசிடியும் பறிமுதல்செய்யப்பட்டது. இந்த வீடியோவை வைத்து அனராவை போலீசார் கைது செய்து கொடுமைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் த்ரிஷா குளிப்பது போன்ற வீடியோ காட்சிகள், இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. தற்போதுபிடிபட்டுள்ள போலி த்ரிஷா விசிடி போல, இன்டர்நெட்டில் வெளியானதும் போலியான த்ரிஷாவின் வீடியோ தான் என போலீசார்கருதுகின்றனர்.


Please Wait while comments are loading...