தம்பியுடன் பிகினியில் சுற்றும் தனுஷ் நாயகி.. பச்சையாக திட்டும் நெட்டிசன்ஸ்.. வைரலாகும் போட்டோ!

மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகளும், இளம் பாலிவுட் நடிகையுமான சாரா அலிகான், தனது தம்பியுடன் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Dhanush Actress Sara Ali Khan Bikini with Brother| Atrangi Re | AkshayKumar

சாரா அலி கானின் இந்த இன்ஸ்டா பதிவை பார்த்த பாலிவுட் ரசிகர்கள், தம்பி உடன் இப்படி பிகினியில் சுற்றலாமா? உங்களுக்கு மூளையே இல்லையா என்று திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மேலும், சாரா அலி கானின் மதத்தை குறிப்பிட்டும், பல நெட்டிசன்கள் பச்சையாக திட்டி வருகின்றனர்.

தம்பியுடன் பிகினியில்

கேதார்நாத், சிம்பா, லவ் ஆஜ் கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சாரா அலி கான், தனது தம்பி இப்ராஹிம் அலி கானின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இப்படியொரு பிகினி புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நியூ இயர் ஹாலிடேவை தீவில் சாரா கொண்டாடிய போது, இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கன்ட்ரோல் பண்ணும் தம்பி

என்னதான் அக்கா சாரா அலி கான், தம்பியுடன் பிகினியில் போஸ் கொடுக்க தயக்கம் காட்ட வில்லை என்றாலும், தம்பி இப்ராஹிம், சாரா அலி கானை டச் பண்ணாமல், கன்ட்ரோல் பண்ணிக் கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தில், அவருக்கு உடன்பாடில்லை என ஜூம் செய்து நெட்டிசன்கள் சாராவை திட்டி வருகின்றனர்.

மத பிரச்சனை

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சாரா அலிகான், தனது தம்பியுடன் இப்படி ஆபாசமாக உள்ளாடையுடன் நிற்பது பாவம் என்றும், அவருக்கு மூளை இல்லை என்றும், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பச்சை பச்சையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். மேலும், சிலர், சாரா அலி கானுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இப்படி போஸ் கொடுத்துள்ளாரே என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தனுஷ் நாயகி

தனுஷ் நாயகி

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், அக்‌ஷய் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள அட்ரங்கி ரே படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாரா அலி கான் நடிக்க உள்ளார். வாரணாசியில், நேற்று தான் அந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. இந்நிலையில், சாரா அலி கான், பதிவிட்டுள்ள இந்த பிகினி போட்டோ சமூக வலைதளத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

என்ன தப்பு

சினிமா படங்களில் மற்ற நடிகர்களுடன், இப்படி பிகினியில் போஸ் கொடுத்து, செம ஹாட்டாக நடித்து ஹீரோயின் நடித்தால் ரசிக்கிறீர்கள், அதே தனது தம்பியுடன், குடும்பத்துடன் சென்ற சுற்றுலாவின் போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டால், ஏன் இப்படி திட்டி தீர்க்கிறீர்கள். இதெல்லாம் நடிகர்களின் வாழ்வில் சாதாரண விஷயம் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

குவிகிறது லைக்ஸ்

பாலிவுட்டின் முன்னணி இளம் நாயகியாக வலம் வரும் சாரா அலி கான், தனது இன்ஸ்டா பக்கத்தில் எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும், அதற்கு மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிகின்றன. தம்பி இப்ராஹிமுடன் இருக்கும் சாரா அலி கான் இருக்கும் இந்த பிகினி புகைப்படங்களுக்கு 2 மில்லியன் லைக்குகளுக்கு மேல் குவிந்து வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X