”கப்பு முக்கியம்” - சர்ச்சையை ஏற்படுத்திய நடிகர் அர்ஜுனனின் பதிவு

விஜயின் பிகில் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், விஜய் ரசிகர்கள் என்னவோ படத்தை
கொண்டாடவே செய்தார்கள். அதிலும், ராயப்பன் கதாபாத்திரம் பேசிய "கப்பு முக்கியம் பிகிலே" என்ற வசனம் விஜய்
ரசிகர்களையும் தாண்டி வைரலாகியுள்ளது.

இப்படி பலரை கவர்ந்த "கப்பு முக்கியம்" வசனத்தின் மூலம் குணச்சித்திர நடிகர் அர்ஜூனன் சர்ச்சையில்
சிக்கியிருக்கிறார். பாலாஜி மோகன் இயக்கத்தில் சித்தார்த், அமலா பால் நடிப்பில் வெளியான 'காதலில் சொதப்புவது
எப்படி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அர்ஜுனன். இப்படத்தில் இவரது வேடம் பலரை கவர்ந்ததை
தொடர்ந்து அர்ஜூனன் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

“Trophy is Important - Actor Arjunas create controversy

காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த அர்ஜூனன், ஆதலால் காதல் செய்வீர், பிரம்மன், வாயை மூடி
பேசவும், அரிமா நம்பி, யான், கப்பல், அவியல், டார்லிங் 2, இது நம்ம ஆளு, நம்பியார், மீண்டும் ஒரு காதல் கதை,
கடவுள் இருகான் குமாரு, வனமகன், புரியாத புதிர், டிக் டிக் டிக் ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது தமிழ் மட்டும்
இன்றி தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் குறித்து நடிகர் அர்ஜூனன், சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய அணியில் அனுபவம் மிக்க வீரராக இருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரிலும் அவர் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். டெஸ்ட், ஒரு
நாள் போட்டி மற்றும் டி20 போட்டி என்று அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அவர் இந்திய அணிக்காக விளையாடி
இருக்கிறார்.

“Trophy is Important - Actor Arjunas create controversy

தற்போது தமிழக கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருக்கும் தினேஷ் கார்த்திக்கை ரசிகர் ஒருவர் கிண்டல் செய்யும்
விதமாக, "இவர் ஒருவர் தான் ஒருநாள், டெஸ்ட், எப்.சி என அனைத்து போட்டிகளிலும் ஹிட் அவுட் ஆனவனர்"
என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக், ஐய்யோ என்ற பொம்மையின்
மூலம் தனது பதிலை வெளிப்படுத்தினார்.

“Trophy is Important - Actor Arjunas create controversy

தினேஷ் கார்த்திக்கின் இந்த பதிலுக்கு கமெண்ட் போட்ட நடிகர் அர்ஜூனன், "கப்பு முக்கியம் தினேஷ் கார்த்திக்"
என்று பதிவிட்டிருந்தார். அர்ஜூனனின் இந்த பதிவு தினேஷ் கார்த்திக்கை கிண்டல் செய்யும் விதமாக இருப்பதாக
நினைத்து சிலர் அர்ஜூனனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உண்மையில், தினேஷ் கார்த்திக்கை உற்சாகப்
படுத்தும் விதமாகவே இந்த வசனத்தை நடிகர் அர்ஜூனன் பயன்படுத்தியிருக்கிறார்.

'பிகில்' படத்தில் விஜய் பேசும் இந்த வசனத்திற்கு திரையரங்கே அதிர்ந்து போகும். அத்துடன், யாரையாவது
உற்சாகப்படுத்த வேண்டும், என்றால் இந்த வசனத்தை தான் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு டிரெண்டாகியிருக்கும்
இந்த வசனத்தின் மூலம் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை நடிகர் அர்ஜூனன் உற்சாகப்படுத்த நினைக்க, அது வேறு
விதமாக புரிந்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X