தற்புகா சிவா இயக்கும் படத்தின் டைட்டில் சஸ்பென்ஸ் உடைக்கப்பட்டது

சென்னை : தர்புகா சிவா இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது என்னை நோக்கி பாயும் தோட்டா பட புரோமஷனுக்காக இசையமைப்பாளர் தர்புகா சிவாவை பல நாட்களாக மறைத்து வைத்து படத்தின் பாடல் வெளியீட்டின் போது இந்த பாடலை இசையமைத்தவர் மிஸ்டர் எக்ஸ் என்றே கூறிவந்தார்.அதற்கு பிறகு பல நாட்கள் கழித்து தர்புகா சிவாதான் படத்தின் இசையமைப்பாளர் என்று அதிகாரபூர்வமாய் அறிவித்தார் . இதற்கு முன் தர்புகா சிவா சசிகுமாரின் கிடாரி படத்திற்கு இசையமைத்து இருந்தார் .

என்னை நோக்கி பாயும் தோட்டா படம் தற்போது ரிலீஸாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல தயாரிப்பாளரான ஐசரி கணேஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை வாங்கி வெளியிட இருக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் டிரென்டாகி வருகிறது. ஜசரி கணேஷனின் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தகவல்கள் தெரிவிக்க பட்டன.

Trpuga Sivas film title announced

மேலும் படம் நவம்பர் 29 ரிலீஸாக போவதாக அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகி இருந்தாலும் . படம் வெளிவந்தால் மட்டுமே நாம் அதை உறுதி செய்ய முடியும் ஏனெனில் படம் இதற்கு முன்பே பத்திற்கும் மேற்பட்ட தடவை தள்ளி போய்விட்டது. இந்த விசயம் படத்தின் ஒபனிங்கை கட்டாயமாக பாதிக்கும் . இந்த படம் இவ்வளவு முறை தள்ளி போயும் படத்தின் மீது எதிர்பார்ப்பு குறையாமல் இருப்பதற்கு காரணம் படத்தின் சிறந்த பாடல்கள் , அதற்கு காரணம் தர்புகா சிவா.

சில படங்களில் நடித்தும் இருக்கும் இசையமைப்பாளர் தர்புகா சிவா தற்போது படம் இயக்க உள்ளார் . இந்த படத்தை சூப்பர் டாக்கீஸின் சமீர் பாரத் ராமுடன் தீபா ஐயரும் இணைந்து தயாரிக்க உள்ளனர் .தர்புகா சிவா படத்தின் தகவல்களை ட்விட்டரில் பகிரந்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை சுஜித் சாரங் செய்கிறார். இவர் துருவங்கள் பதினாறு ,நரகாசுரன், டேக்ஸிவாலா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் . மேலும் படத்தின் படத்தொகுப்பை ஶ்ரீஜித்சாரங் செய்ய உள்ளார் .

தற்போது படத்தின் தலைப்பை பற்றிய தகவலை ட்விட்டரில் கூறியிருக்கிறார் தர்புகா சிவா. படத்திற்கு 'முதல் நீ முடிவும் நீ ' என்று தலைப்பு வைக்கபட்டுள்ளது.மேலும் படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது .

இதற்கு முன்பே என்னை நோக்கி பாயும் தோட்டாவில் பல நல்ல பாடல்களை கொடுத்த தர்புகா சிவா இந்த படத்திலும் நல்ல பாடல்களை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதை தாண்டி இவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் படமும் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. தர்புகா சிவா சிறப்பான பாடல்கள் கொடுப்பதில் வல்லவர். அவரின் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் எப்படி இருக்கும் என்று அவரின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்து கொண்டுஇருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X