நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
சென்னை: பிக்பாஸ் ஃபினாலே மேடையில் இறுதியாக பேசிய பாலாஜி நம்புங்கள் நானும் நல்லவன்தான் என்று கூறி உருக வைத்துவிட்டார்.
Recommended Video
பெரும் எதிர்பார்ப்புடனும் சுவாரசியத்துடனும் சென்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
நேற்று மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை என தொடர்ந்து 6 மணி நேரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுவாரசியம் குறைவு..
என்னதான் நடனம், பாடல் என களைக்கட்டினாலும் ஆடியன்ஸ் இல்லாததால் சுவாரசியம் சற்று குறைவாகதான் இருந்தது. நிகழ்ச்சியின் இறுதியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆரி மற்றும் பாலாஜியை அழைத்து வந்த கமல், அவர்களுக்கு ஏவியை போட்டுக் காட்டினார்.

ஃபீலான பாலாஜி
அதில் பாலாஜி பிக்பாஸ் வீட்டில் ஆரியிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட காட்சிகளும் இருந்தது. தான் கோப்பட்டு ஆரியை மரியாதை குறைவாக பேசிய காட்சிகளை பார்த்ததும் பாலாஜியின் முகமே மாறிவிட்டது. ரொம்பவே ஃபீலாகிவிட்டார்.

ஆரிக்கு வாழ்த்து
பின்னர் வெற்றியாளர் யார் என்பதை ஆரியின் கையை தூக்கிப்பிடித்து வின்னர் என அறிவித்தார் கமல். தொடர்ந்து ஆரிக்கு வாழ்த்து சொன்ன சக போட்டியாளரும் ரன்னர் அப்மான பாலாஜி ஆரியை கட்டியணைத்து வாழ்த்து கூறினார்.

மனதில் தோன்றியதை பேசியிருக்கிறேன்
தொடர்ந்து பேசிய பாலாஜி, வின்னர் ஆன அண்ணனுக்கு வாழ்த்துகள். விளையாட்டு இரண்டு விதமா விளையாடலாம். நான் விளையாடிய மாதிரியும் விளையாடலாம். என்னை ரன்னர் அப் ஆக்கியதற்கு நன்றி. மனதில் தோன்றியதை பேசியிருக்கேன்.

நம்புங்க நானும் நல்லவன்தான்
மனதுக்குள்ளேயே வைத்திருந்தாலும் அது அழுக்குதான். நான் மனதுக்குள் வைத்திருக்கவில்லை. ஒரு சில இடத்தில் தவறாக நடந்திருந்தால் மன்னித்து விடுங்கள். நானும் பார்த்துவிட்டு தவறை திருத்திக் கொள்கிறேன். நம்புங்க நானும் நல்லவன்தான் என்று குழந்தை போல் கூறி உருக வைத்து விட்டார். தொடர்ந்து பாலாஜிக்கு பிக்பாஸின் கேம் சேஞ்சர் விருது கொடுக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











