தூங்கும் சிங்கத்தை எழுப்பாதீங்க.. ரவி மோகன் விஷயத்தில் கெனிஷாவுக்கு ஆர்த்தி ரவி எச்சரிக்கை
சென்னை: நடிகர் ரவி மோகனுக்கும், ஆர்த்திக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு, 'ஆர்த்தியை பிரிகிறேன்' என ரவி அறிவித்தார். அதனையடுத்து பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்தார். ஆனால் நேற்று கெனிஷா வெளியிட்டிருந்த வீடியோவில் அவர் பேசியதை பார்த்த ரசிகர்களோ ஒருவேளை ரவிக்கும், கெனிஷாவுக்கும் பிரேக் அப் ஆகிவிட்டதோ என்றும் பேச தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஆர்த்தியை சில வருடங்களுக்கு முன்பு பிரிந்த ரவி; பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்தார். இரண்டு பேரும் முதலில் நண்பர்கள் என்றுதான் கருதப்பட்டது. ஒருகட்டத்தில் அதற்கும் மேலே அவர்களுக்கிடையே உறவு இருக்கிறதோ என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுந்தது. எங்கு சென்றாலும் இரண்டு பேரும் ஒன்றாகவே சென்றார். ஆர்த்தியோ சிங்கிளாக இருந்துகொண்டு தனது இரண்டு மகன்களையும் வளர்க்கும் பொறுப்பில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டுவருகிறார்.

கெனிஷாவின் வீடியோ: இப்படிப்பட்ட சூழலில் கெனிஷா திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் ரவி குறித்து பேசிய அவர், "எனக்கு 18, 19 வயது இருக்கும்போதே திருமணம் நடந்துவிட்டது. அப்போது எனக்கு விவரமே தெரியாது. திருமணத்துக்கு பிறகு எனது வயிற்றில் நான்கு மாத கரு இருந்தது. என்னை திருமணம் செய்துகொண்டவர் என்னை பலமாக தாக்கினார். கரு கலைந்துவிட்டது. அம்மா, அப்பா, குழந்தை என எல்லாவற்றையும் இழந்த நான் ரவி மோகனின் குடும்பத்தை கெடுக்க வேண்டும் என்று நினைப்பேனா? ரவி மோகன் ஒன்றும் குழந்தை இல்லை. அவரது வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என முடிவெடுக்க வேண்டியவர் அவர்தான். யாருடன் பழக வேண்டும் என்று முடிவு எடுப்பதும் அவர்தான். அப்படி இருக்கும்போது ஏன் என்னை இழுக்கிறீர்கள்" என்பன உள்ளிட்ட பல விஷயங்களை பேசியிருந்தார்.
வழியனுப்புகிறேன்: மேலும், 'ஒரு மனிதரை காப்பாற்றுவதற்காக நான் என்னையே தியாகம் செய்தேன். ஆனால் இந்த உலகம் உண்மைக்கும் மென்மைக்கும் இடம் தராத ஒன்றாக இருக்கிறது. பொய் சொல்பவர்கள் மற்றும் ஏமாற்றுபவர்களுக்கே இங்கே இடம் இருக்கிறது. திரைத்துறையினர், அவரை நேசிப்பவர்கள், வெறுப்பவர்கள் என அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். அவர் இனிமேல் உங்கள் சொத்து. இனிமேல் எந்த விளக்கமும் இல்லை. அவருக்காக நான் போராடப்போவதும் இல்லை. அவரை முழுமையான விடுதலையுடன் வழியனுப்புகிறேன்.
அனைத்திலிருந்தும் விலகுகிறேன்: இணையத்தில் தொடர்ந்து என் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. மன உளைச்சலாக இருக்கிறது. எனது இசை பயணத்தில் இருந்தும், தெரபி பணியிலிருந்தும் கொஞ்சம் விலகுகிறேன். சென்னையை விட்டு வெளியேறுகிறேன். இனிமேல் வரமாட்டேன். பெண்ணியம் வென்றது, மகிழ்ச்சி தோற்றது' எனவும் குறிப்பிட்டிருந்தார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள், ரவிக்கும், கெனிஷாவுக்கும் பிரேக் அப் ஆகிவிட்டது என்று உறுதி செய்திருக்கிறார்கள்.
ஆர்த்தி ரவியின் பதிலடி: இந்நிலையில் ரவியின் முன்னாள் ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை ஒருபோதும் எழுப்பக்கூடாது. அதுவும் ஒரு தாய் சிங்கமாக அது இருந்தால் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். என்னுடைய கண்ணியமான அமைதியை ஒருபோதும் பலவீனமாக நினைக்கக்கூடாது. தேவைபட்டால் என் குழந்தைகளையும், கண்ணியத்தையும் காபாற்ற்றுவதற்காக எனது வசதியான வட்டத்திலிருந்து உண்மையுடன் இந்த உலகத்தை எதிர்கொள்வேன். ஏனெனில் உண்மை எப்போதும் வெல்லும்" என தெரிவித்திருக்கிறார். இந்தப் பதிவில் அவர் யார் பெயரையும் குறிப்பிடவில்லையென்றாலும்; நேற்றைய் கெனிஷா வீடியோவுக்குதான் அவர் பதிலடி கொடுத்திருப்பதாக பரவலான கருத்து எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
