பரபரப்பை கிளப்பிய கே.எஸ்.ரவிக்குமார் வீடியோ...பின்னணி காரணம் இது தானாம்

சென்னை : முக்கிய அறிவிப்பு என்ற வாசகத்துடன் மார்ச் 25 ம் தேதி ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் டைரக்டரும், நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார். அதில், கஷ்டப்பட்டு கட்டிய வீட்டிற்கு பிரச்னை என்றால் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும் என பேசி இருந்தார்.

யாரால் பிரச்னை, என்ன பிரச்னை என ஏதும் கூறாமல், அடுத்த வீடியோவில் பேசலாம் என அந்த வீடியோவை கே.எஸ்.ரவிக்குமார் முடித்திருந்தார். தேர்தல் சமயத்தில் அவர் வெளியிட்ட இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக வலைதளத்தில் குவிந்த ஆதரவு

சமூக வலைதளத்தில் குவிந்த ஆதரவு

இதைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டனர். இந்நிலையில் அடுத்த நாளே தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து மற்றொரு வீடியோவையும் வெளியிட்டார்.

கே.எஸ்.ரவிக்குமார் தந்த விளக்கம்

நேற்று மற்றொரு வீடியோவை வெளியிட்டு அதற்கு அவரே விளக்கமும் சொல்லி உள்ளார். அந்த வீடியோவில், இது நான் நடிக்கும் மதில் படம் பற்றியது. கடந்த 2 நாட்களாக வெளியிட்ட வீடியோவில் நான் கே.எஸ்.ரவிக்குமாராக பேசவில்லை. அந்த படத்தில் நான் நடிக்கும் கேரக்டரான லஷ்மிகாந்தனாக தான் பேசினேன்.

நல்லா கிளப்புறாங்கப்பா பீதிய

நல்லா கிளப்புறாங்கப்பா பீதிய

தேர்தல் சமயத்தில் வெளியிடப்பட்டதால் இந்த வீடியோ பரபரப்பை கிளப்பி இருக்கும் என தெரியும். இது வெறும் படத்திற்கானது மட்டுமல்ல சொந்த வீடு வைத்திருக்கும் பலரும் சந்தித்து வரும் பிரச்னை தான் என கூறி உள்ளார்.

தமிழ் புத்தாண்டு ரிலீஸ்

தமிழ் புத்தாண்டு ரிலீஸ்

ஏப்ரல் 14 ம் தேதி மதில் படம் ரிலீசாக உள்ளதாக தெரிவித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார், மதில் படத்தின் டிரைலரையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ப்ரோமோ வீடியோவுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

யாரெல்லாம் நடித்துள்ளனர்

யாரெல்லாம் நடித்துள்ளனர்

மதில் படத்தை, யாரடி நீ மோகினி படத்தை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஜாங்கிரி மதுமிதா, லொள்ளு சபா சுவாமிநாதன், காத்தாடி ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X