காதலை துண்டித்தது ஜூலிதான்.. காதலன் அளித்த பகீர் வாக்குமூலம்.. அட்வைஸ் கூறிய போலீஸ்.. பரபரப்பு தகவல்

சென்னை: பிக்பாஸ் ஜூலி தனது காதலர் குறித்து புகார் அளித்த நிலையில் அவரது காதலர் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று பிரபலமானாவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அவர் போட்ட முழக்கத்தின் மூலம் வீர தமிழச்சி என ட்ரென்ட்டானார்.

இதன் தொடர்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை டார்கெட் செய்ததோடு அவருக்கு எதிராகவும் பேசினார் ஜூலி.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

பிக்பாஸ் வீட்டில் சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் ஊதி பெரிதாக்கினார். காயத்ரி, சக்தி, நமீதா என ஒரு கேங்கை சேர்த்துக் கொண்டு ஓவியாவை டார்கெட் செய்து வந்தார். இதனால் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொய்க்கு மேல் பொய்களை அடுக்கியதால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தொகுப்பாளர் ஆனார் ஜூலி. அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது. இதனால் நடிகையானார் ஜூலி. சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் ஜூலி.

காதலர் மீது புகார்

காதலர் மீது புகார்

ஏற்கனவே ஜூலி மீது கடுப்பில் உள்ள ரசிகர்கள் அவர் என்ன வீடியோ போட்டாலும் போட்டோ ஷேர் செய்தாலும் அதனை விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஜூலி கடந்த வாரம் தனது காதலர் மீது புகார் அளித்தார். அதாவது 4 ஆண்டுகளாக தன்னை காதலித்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக அவர் மீது சென்னை அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஜூலி.

திருமணம் செய்ய மறுப்பு

திருமணம் செய்ய மறுப்பு

அழகு நிலையத்தில் பணியாற்றி வரும் மணீஷ் என்பவரும் ஜூலியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்ட நிலையில் ஜூலியை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரிடம் இருந்து தங்க நகை இருசக்கர வாகனம் மற்றும் வீட்டுக்கு ஃப்ரிட்ஜ் என 2, 30000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மணீஷ் பெற்றதாகவும் ஆனால் தற்போது மதத்தை காரணம் காட்டி தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் கூறியிருந்தார் ஜூலி.

மணீஷ் என்பவருடன் பழக்கம்

மணீஷ் என்பவருடன் பழக்கம்

ஜூலி அளித்த புகாரின் அடிப்படையில் அவரது காதலரான மணீஷிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது கடந்த 2017 ம் ஆண்டு ஜூலிக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் பிரச்சனை எழுந்தபோது கேரளாவை பூர்வீகமாக கொண்ட மணீஷ் என்பவர் ஜூலிக்கு ஆறுதல் கூறியுள்ளார். அப்போது ஜூலிக்கும் மணீஷூக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.

காதலை துண்டித்த ஜூலி

காதலை துண்டித்த ஜூலி

இந்த நிலையில் சமீபத்தில் ஜூலி வேறொரு நபருடன் நட்பாக பழக மணீஷ் உடனான காதலை துண்டித்து அவருடன் பேசுவதையே தவிர்த்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூலியின் இந்த திடீர் காதல் துண்டிப்பை தாங்கிக்கொள்ள முடியாத மணீஷ் ஜூலிக்கு கால் செய்து தன்னை பிரிந்து செல்ல வேண்டாம் எனவும் அவர் இல்லாமல் தன்னால் வாழ இயலாது எனவும் கூறி அழுது அடிக்கடி கால் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

திருப்பி கொடுத்த மணீஷ்

திருப்பி கொடுத்த மணீஷ்

இதனால் மணீஷை மிரட்டுவதற்காக ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. ஜூலி புகார் அளித்ததை தொடர்ந்து மணீஷ் தாமாகவே முன்வந்து ஜூலி வாங்கி கொடுத்த தங்க நகை, ஃபிரிட்ஜ் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் முன்னிலையில் திருப்பி கொடுத்துள்ளார்.

அட்வைஸ் கூறிய போலீஸ்

அட்வைஸ் கூறிய போலீஸ்

இதனிடையே மணீஷ் மற்றும் ஜூலி ஆகியோர் ஒன்றாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை அழித்த போலீசார் இருவருக்கும் அறிவுரைக்கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதலர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கொடுக்கப்பட்ட புகாரில் ஜூலியே காதலை துண்டித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X