இப்ப வேற ட்ராக்கு... 'தானா சேர்ந்த கூட்டம்' டீசர்!
சென்னை : ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இப்படம், சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், செந்தில், கலையரசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது.
'நானும் ரவுடி தான்' படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. சூர்யா ரசிகர்கள் பெரிய வெற்றிக்காக இந்தப் பட ரிலீஸுக்கு காத்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கெனவே 'சொடக்கு மேல சொடக்கு போடுது' எனும் பாடல் வெளியாகி ஹிட்டான நிலையில், படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்படும் என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 'தானா சேர்ந்த கூட்டம்' பொங்கல் ரிலீஸாக திரைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications











