Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
யூ-ட்யூப்ல ஹிட்டாகி என்ன பண்ண.. தியேட்டர்ல ஓடலையே பாஸு..?
Recommended Video
சென்னை : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம் பெற்ற 'சொடக்கு மேல சொடக்கு' பாடலின் லிரிக்கல் வீடியோ, 'மெர்சல்' பாடலை விட அதிக வியூவ்ஸ் கடந்து யூ-ட்யூபில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இந்த சாதனையை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களுக்கும், படக்குழுவினருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன் 'மெர்சல்' இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை சீண்டுவது போல ட்வீட் செய்திருந்தார்.
அனிருத் இசை அமைத்த 'தானா' சேர்ந்த கூட்டம் படத்தின் எல்லாப் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலும் இந்தப் படத்தில் இடம் பெற்ற 'சொடக்கு' பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து மெகா ஹிட்டானது.
யூ-ட்யூபில் வெளியாகி அதிகமானோர் பார்த்து ரசித்த லிரிக்கல் வீடியோவாக 'சொடக்கு மேல...' பாடல் சாதனை படைத்துள்ளது. ஆனால், தியேட்டரில் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை.
தானா சேர்ந்த கூட்டம் படம் தியேட்டரில் சரியாகப் போகவில்லை. அதை மறைப்பதற்காக யூ-ட்யூப் சாதனையை பெரிதுபடுத்துகிறார்கள் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில், இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு சூர்யா, இன்னோவா கார் பரிசளித்ததும் விநியோகஸ்தர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.