விஜய் சேதுபதிக்கு டப்பிங் பேசிய TSK... சொகுசு கார் வாங்கி அசத்தல்... விலை எவ்வளவுன்னு தெரியுமா?

திருச்சி: சன் டிவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் மிமிக்ரி செய்து பிரபலமானவர் TSK.

சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான ஃபார்ஸி வெப் சீரிஸில் விஜய் சேதுபதிக்கு டப்பிங் கொடுத்திருந்தார்.

விஜய் சேதுபதியின் குரலை தத்ரூபமாக டப்பிங் கொடுத்தது TSK-வை இன்னும் பிரபலமாக்கியது.

இந்நிலையில், பல லட்சம் மதிப்புடைய தனது ட்ரீம் காரை வாங்கி கெத்து காட்டியுள்ளார் TSK.

 மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் TSK

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் TSK

திருச்சி பகுதியைச் சேர்ந்த TSK காந்தி கணக்கு என்ற படத்தில் நடித்திருந்தார். முன்னதாக சன் டிவியில் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். அதேபோல், ஆதித்யா, கலைஞர் டிவி, மக்கள் டிவிகளிலும் வேலை பார்த்துள்ளார். சரவணகுமார் என்ற பெயரில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்தவர் தான் இந்த TSK. தற்போது டப்பிங் கலைஞராகவும் பிஸியாக வலம் வருகிறார்.

 விஜய் சேதுபதிக்கு டப்பிங்

விஜய் சேதுபதிக்கு டப்பிங்

சமீபத்தில் இந்தியில் வெளியான ஃபார்ஸி வெப் சீரிஸ்ஸில் விஜய் சேதுபதிக்கு டப்பிங் கொடுத்திருந்தார் TSK. அமேசான் ப்ரைமில் வெளியான இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதியுடன் ஷாகித் கபூர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதில், விஜய் சேதுபதிக்கு அச்சு அசலாக அவரைப் போலவே டப்பிங் கொடுத்து கலக்கியிருந்தார் TSK.

 சொகுசு கார் வாங்கிய TSK

சொகுசு கார் வாங்கிய TSK

ரியாலிட்டி ஷோக்களிலேயே விஜய் சேதுபதியின் வாய்ஸில் பேசி ரசிகர்களை மெய்மறக்கச் செய்த TSK, ஃபார்ஸியில் இன்னும் ஒருபடி மேலே சென்றுவிட்டார். இதனையடுத்து அவரை நேரில் அழைத்து பாராட்டிய விஜய் சேதுபதி, கைப்பட அவரே எழுதிய ஒரு கடிதத்தையும் அன்பளிப்பாக கொடுத்து முத்தமும் இட்டார். இந்நிலையில், TSK தனது ட்ரீம் காரை வாங்கி அந்த மகிழ்ச்சியை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

 விலை இத்தனை லட்சமா?

விலை இத்தனை லட்சமா?

தனது குடும்பத்துடன் ஷோரும் சென்ற TSK, தனக்கு மிகவும் பிடித்த மகேந்திரா XUV 700 காரை வாங்கியுள்ளார். TSK வாங்கியுள்ள மஹேந்திரா XUV 700 வேரியண்ட் விலை 20 லட்சம் ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது. நீல நிறம் கொண்ட அந்த காரில், தனது மனைவி, மகள்கள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு கெத்தாக கிளம்புகிறார் TSK. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து, உங்களது வாழ்த்துகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். TSK-வின் இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X