TTF Vasan - மயக்கம் வந்து முறுக்கினான்.. வண்டி மேலே தூக்கிடுச்சு.. டிடிஎஃப் வாசன் நண்பர் சொன்ன விளக்கம்

சென்னை: டிடிஎஃப் வாசனுக்கு எப்படி விபத்து நிகழ்ந்தது என்பது குறித்து அவரது நண்பர் அஜிஷ் விளக்கமளித்திருக்கிறார்.

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் எவ்வளவுக்கு எவ்வளவு புகழடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சையும் இவரை சுற்றி வட்டமிடுகிறது. மேலும், வாசனை கண்டு பல சிறுவர்கள் லட்சக்கணக்கிலான ரூபாய் மதிப்புடைய பைக் மேல் மோகம் கொண்டு வீட்டில் நச்சரிப்பது, அப்படியே பைக் வாங்கினாலும் அசுர வேகத்தில் சென்று விபத்தை சந்திப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தனது ரசிகர்கள் என கூறிக்கொண்டு பலரின் புகைப்படங்களை வாசன் அவரது முதுகில் அண்மையில் பச்சைக் குத்திக்கொண்டார். மேலும் மஞ்சள் வீரன் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.

TTF Vasan Friend Ajeesh Explains about Yesterday Accident

தொடர் சர்ச்சை: சில மாதங்களுக்கு முன்புகூட சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் டிடிஎஃப் வாசன் சென்ற கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியது. அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. ஆனால் அந்தக் காரை தான் ஓட்டவில்லை என்றும்; தன் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள் என்றும் டிடிஎஃப் வாசன் வீடியோவும் வெளியிட்டிருந்தார்.

பெரும் விபத்து: இந்நிலையில் டிடிஎஃப் வாசன் நேற்று சென்னை - பெங்களூருவுக்கு பைக் ரைட் செய்துகொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் அவர் சென்ற பைக் விபத்தில் சிக்கி சில மீட்டர் தூரத்துக்கு வாசன் தூக்கி வீசப்பட்டார். அதுதொடர்பான சிசிடிவி காட்சியில் வாசன் வீலிங் செய்ய முற்பட்டபோது விபத்து ஏற்பட்டது உறுதியானது. கையில் முறிவுடன் தற்போது சிகிச்சையில் இருக்கிறார் அவர். வாசன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விபத்தில் சிக்கிய லட்ச ரூபாய் மதிப்பிலான பைக் சுக்குநூறாகிவிட்டது.

அஜிஷ் விளக்கம்: இந்த சூழலில் வாசனின் நண்பரும், அவருடன் ரைட் செல்பவருமான அஜிஷ் இந்த விபத்து குறித்து பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "டிடிஎஃப் வாசன் வீலிங் செய்ததால் விபத்தை சந்திக்கவில்லை. அவர் வீலிங் செய்தால் எவ்வளவு கட்டுப்பாடு இருக்கும் என்பது ரசிகர்களுக்கு தெரியும். ரைட் சென்றுகொண்டிருக்கும்போது உடம்பு சரியில்லை என்று சொன்னான். சரி களைப்பாக இருக்கும் ஒரு டீ கடையில் நிறுத்தி டீ சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று சொன்னேன்.

ஆனால் அதற்குள் அவனுக்கு உடம்பு டி ஹைட்ரேட் ஆகிவிட்டது. இதன் காரணமாக அவனுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த மயக்கத்தில் அவன் வண்டி ஆக்சிலேட்டரை வேகமாக முறுக்கும்போது வண்டி மேலே தூக்கிவிட்டது. அதன் காரணமாகத்தான் விபத்து ஏற்பட்டுவிட்டது. ஹெல்மெட் போட்டிருந்தாலும் தலையில் கொஞ்சம் அடிதான். ஸ்கேன் செய்து பார்த்ததில் எந்த பிரச்னையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X