பாலியல் குற்றம் சாட்டப்பட்ட மலையாள நடிகருடன் டிடிஎஃப் வாசன் காதலி இருக்கும் வீடியோ.. ரசிகர்கள் ஷாக்!
சென்னை: ஒட்டுமொத்த இந்திய சினிமாவுமே, தற்போது மலையாள சினிமா உலகில் நடைபெற்றும் வரும் நடிகைகளுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் அதிரடியான நடவடிக்கைகளைப் பார்த்து மிரண்டுபோய் உள்ளனர். காரணம் மலையாள சினிமாவினைத் தொடர்ந்து அடுத்தடுத்து எந்தெந்த சினிமா துறையில் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளனர் என்ற பயத்திலேயே பலரும் இருந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இது போன்ற நடவடிக்கைகள் தொடங்கினால் பல முன்னணி நபர்கள் சிக்குவார்கள் என கூறப்படுகின்றது. இந்நிலையில் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக உலா வருகின்றது. அது குறித்து பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் நடைபெறும் நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, கேரள அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைத்து விசாரிக்கச் சொன்னது. அந்த கமிட்டி கொடுத்த விசாரணை அறிக்கை மூலம், பல முன்னணி கதாநாயகர்கள் தொடங்கி தயாரிப்பாளர்கள், என பலர் மீது குற்றசாட்டுகளும் புகார்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

ஹேமா கமிட்டி அறிக்கை சமர்பித்த சில தினங்களில் மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் தனது பதவியை தானே ராஜினாமா செய்தார். அதன் பின்னர் ஒட்டுமொத்த நடிகர் சங்கமும் கலைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தது பலரது மனதில் பல கேள்விகளுக்கு வழிவகுத்தது. குறிப்பாக ஹேமா கமிட்டி சமர்பித்த அறிக்கையில் மோகன்லாலுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
புகார்: ஹேமா கமிட்டி தனது அறிக்கையை முன் வைத்த பின்னர், பல நடிகைகள் தங்களுக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பொது வெளியில் தைரியமாக கூறி வருகின்றனர். குறிப்பாக, நடிகை மீனு முனீர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " நடிகர்கள் முகேஷ் ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ மற்றும் இடைவேல பாபு ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இவர்கள் மூவரும் படப்பிடிப்பின்போது தன்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். மேலும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினார்கள். ஒருமுறை நான் கழிவறையில் இருந்து வெளியே வரும்போது ஜெயசூர்யா தகாத முறையில் நடந்து கொண்டார்" எனக் கூறியது மட்டும் இல்லாமல், இது தொடர்பாக காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.

மோகன்லால்: இவர்கள் மூவரும் விரைவில் கைது செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே நடிகர் சித்திக் மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது புகார்கள் குவிந்து வருகின்றன. இவர்களும் நடிகர் சங்கத்தில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். மலையாள நடிகர் சங்கத்தினர் ராஜினாமா செய்தது மற்றும் மலையாள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது என அனைத்தும், தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக நடிகை பார்வதி திருவோத்து தெரிவித்தார். மேலும் இவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தது முழுக்க முழுக்க கோழைத்தனமான செயல் என காட்டமாக விமர்சனம் செய்தார்.
வீடியோ: இந்நிலையில் ஒரு வீடியோ இணையத்தில் உலா வருகின்றது. அதில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நடிகர் இடைவேல பாபுவுடன், பிரபல யூடூயூப்பர் மற்றும் மஞ்சள் வீரன் படத்தில் கதாநாயகனான நடித்து வருபவரான டி.டி.எஃப் வாசனின் காதலி, ஷாலின் சோயா இருக்கின்றார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும், சினிமாக்களில் நடிக்க முயற்சி செய்து வருகின்றார். மேலும் இவர் நடனக் கலைஞர் ஆவார். விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வருகின்றார். ஏற்கனவே குறிப்பிட்ட வீடியோவில் ஷாலின் இடைவேல பாபுவுடன் ரீல்ஸ் செய்து கொண்டு உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தீயாக வலம் வருகின்றது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











