ரஜினி, விஜய்லாம் ஓரம் போங்க.. டிடிஎஃப் வாசன்தான் அடுத்த சூப்பர் ஸ்டாராம்.. யார் சொல்லிருக்காங்க பாருங்க
சென்னை: TTF Vasan (டிடிஎஃப் வாசன்) அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் டிடிஎஃப் வாசன்தான் என இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் வாசன். இவர் தனது பைக்கில் பல இடங்களுக்கு ரைட் செல்வதையும், அதை தனது யூட்யூப் சேனலில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.டிடிஎஃப் வாசன் என அழைக்கப்படுகிறார்.

வாசன் பிறந்தநாள்: இவரது யூட்யூப் சேனலுக்கு ஏராளமானோர் சப்ஸ்க்ரைபர்களாக இருக்கின்றனர். சினிமா பிரபலத்துக்கு இணையாக 2k கிட்ஸ் மத்தியில் இவருக்கு மவுசு இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் முன்பு தனியார் ஹோட்டலில் வாசன் பிறந்தநாளை முன்னிட்டு பலர் அங்கு கூடினர். அதை பார்த்தவர்கள் இவர் என்ன சினிமா பிரபலமா என்று கேள்விகளை கேட்டனர். அந்த அளவுக்கு கூட்டம் கூடியது.
சர்ச்சை: டிடிஎஃப் வாசனை சுற்றி சர்ச்சைகளும் அதிகளவில் எழுந்திருக்கிறது. மேலும், வாசனை கண்டு பல சிறுவர்கள் லட்சக்கணக்கிலான ரூபாய் மதிப்புடைய பைக் மேல் மோகம் கொண்டு வீட்டில் நச்சரிப்பது, அப்படியே பைக் வாங்கினாலும் அதிவேகத்தில் சென்று விபத்தை சந்திப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தனது ரசிகர்கள் என கூறிக்கொண்டு பலரின் புகைப்படங்களை வாசன் அவரது முதுகில் அண்மையில் பச்சைக் குத்திக்கொண்டார்.
தொடர்ந்து வழக்குகள்: தொடர்ந்து ரைட் சென்றுகொண்டிருந்த அவர் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் சென்றதால் பல வழக்குகளை வாங்கியிருக்கிறார். மேலும் காவல் நிலையத்துக்கு வரும்போது கோட் சூட்டுடன் ஒரு பாடலை எடிட் செய்து வீடியோ போட்டதும் சர்ச்சையானது. சமீபத்தில்கூட சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் டிடிஎஃப் வாசன் சென்ற கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியது. அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. ஆனால் அந்தக் காரை தான் ஓட்டவில்லை என்றும்; தன் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள் என்றும் டிடிஎஃப் வாசன் வீடியோவும் வெளியிட்டிருந்தார்.
ஹீரோ வாசன்: சூழல் இவ்வாறு இருக்க படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார் டிடிஎஃப் வாசன். செல்அம் என்பவர் இயக்கும் படத்துக்கு மஞ்சள் வீரன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தை தி பட்ஜ்ரெட் பிலிம் கம்பெனி தயாரித்திருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வாசன் பிறந்தநாளான கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியானது. பைக் ரைடராக இருக்கும் டிடிஎஃப் வாசன் தனது காதலிக்காக அதை விட்டுவிடுவார் என்றும் ஆனால் காதல் பாதியிலேயே முடிந்துவிடும் அதன் பிறகு மீண்டும் பல போராட்டங்களுக்கு பிறகு பைக் ரைடை ஆரம்பிப்பதுதான் படத்தின் ஒன்லைன் என்று கூறப்படுகிறது.
அடுத்த சூப்பர் ஸ்டார்: இந்நிலையில் டிடிஎஃப் வாசன் குறித்து படத்தின் இயக்குநர் செல்அம் பேசுகையில், "மஞ்சள் வீரன் படத்தின் ஹீரோ டிடிஎஃப் வாசனுக்கு கடவுளின் ஆசி இருக்கிறது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அடுத்த சூப்பர் ஆகக்கூடிய அனைத்து தகுதியும் டிடிஎஃப் வாசனுக்கு இருக்கிறது" என்றார். இதற்கு முன் இந்தப் படம் குறித்து பேசியிருந்த இயக்குநர், படம் மெகா ஹிட் ஆகும் என்றும் நிச்சயம் தேசிய விருதை பெறும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











