அடுத்த சூப்பர் ஸ்டார் டிடிஎஃப் வாசன் தான்.. அலறவிட்ட இயக்குநர்.. கொந்தளித்த பேன்ஸ்!
சென்னை: டிடிஎஃப் வாசன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பைக் ஓட்டி இளைஞர்கள் மத்தியில் பிரபலமான டிடிஎஃப் வாசன் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

அவர் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரின் பிறந்த நாள் அன்று வெளியானது. இப்படத்திற்கு மஞ்சள் வீரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் வீரன்: திருவிக பூங்கா என்கிற திரைப்படத்தை இயக்கிய செல் அம் என்பவர், மஞ்சள் வீரன் படத்தை இயக்க உள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இயக்குநர் படம் குறித்து பலவிஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் போது சினிமா மீது எனக்கு இனம்புரியாத காதல் வந்துவிட்டது. என்னுடன் படித்தவர்கள், கூடபடிச்ச பெண்ணை காதலித்தார்கள். ஆனால் நான் சினிமாவை காதலித்தேன்.
திருவிக பூங்கா: அதன் இன்ஜினியரிங் படித்து முடிந்தேன், அப்போது எனக்கு ஏஈ வேலை கிடைத்தது. ஆனால், நான் வேலைக்கு போகவில்லை. முதல் படத்தை எடுத்து முடித்துவிட்டு தற்போது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறேன். நான் இயக்கிய திருவிக பூங்கா படத்தை இதுவரை 276 முறை பார்த்து இருக்கிறேன்.
ஆஸ்கர் விருது வேண்டாம்: மஞ்சள் வீரன் படத்திற்கு ஆஸ்கர் விருது வந்தால் வாங்கமாட்டேன், ஏன் என்றால், வெள்ளையனே வெளியேறு என்று புரட்சி செய்து அவர்களை வெளியேற்றி விட்டு, மீண்டும் அவர்கள் கையில் நான் விருதை வாங்க மாட்டேன். ஆனால், தேசிய விருது கொடுத்தால் வாங்கிக் கொள்வேன்.

மஞ்சள் வீரன் படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு டிடிஎஃப் வாசன் சரியாக இருப்பார் என்று இவரிடம் கதையை சொன்னேன், நான் சொன்ன கதை அவருக்கு பிடித்துவிட்டதால் படத்திற்கு ஓகே சொல்லிவிட்டார்.
அடுத்த சூப்பர் ஸ்டார்: மேலும்,படத்திற்கு வேண்டுமானால் டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரனாக இருக்கலாம். ஆனால், உண்மையில் அவர் ஓர் மாவீரன். 23 வயதில் டிடிஎஃப் வாசன் மிகுந்த ஞானத்தோடு இருக்கிறார். அவருக்கு கடவுளின் அணுகிரகம் இருக்கிறது. நிச்சயம் அவர் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என்ற இயக்குநர் செல் அம் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த பேட்டியைப் பார்த்த நெட்டிசன்ஸ் கொந்தளித்துப் போய் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











