டிடிஎஃப் வாசனை மடியில் உட்கார வைத்து போஸ்.. காதலர் பிறந்தநாளுக்கு சூப்பரா வாழ்த்திய ஷாலின் ஜோயா!
சென்னை: மஞ்சள் வீரன் படத்தில் நடித்து வரும் டிடிஎஃப் வாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். டிடிஎஃப் வாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது காதலியும் குக் வித் பிரபலமுமான ஷாலின் ஜோயா டிடிஎஃப் வாசனுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யூடியூபரான டிடிஎஃப் வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி பல்வேறு சாகசங்களை செய்து ஏகப்பட்ட இளம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதன் காரணமாக அதை விட அதிகளவிலான பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார்.

சென்னை டு பெங்களூர் ஹைவே ரோட்டில் அதிவேகமாக சென்று விபத்தில் சிக்கிய நிலையில், அவர் மீது வழக்குகள் பதிவாகி சிறைக்கும் சென்று வந்தார். இந்நிலையில், தனது காதலர் பிறந்தநாளுக்கு ஷாலின் ஜோயா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டிடிஎஃப் வாசன் பிறந்தநாள்: சரியான 2கே கிட் என்றால் டிடிஎஃப் வாசனை தான் சொல்ல வேண்டும். கடந்த 2000ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி கோவை, மேட்டுபாளையத்தில் பிறந்தவர் தான் டிடிஎஃப் வாசன். இன்று தனது 24வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதற்குள் ஏகப்பட்ட ஏழரைகளை இழுத்துக் கொண்டு வந்து சிறைக்கு எல்லாம் சென்று வந்து விட்டார். பிரபலம் ஆனாலே பிராப்ளம் தான் என்பது டிடிஎஃப் வாசனுக்கு பொருந்தி விட்டது.

காதலி மடி மீது: ராஜா மந்திரி, கண்ணகி உள்ளிட்ட படங்களில் நடித்த ஷாலின் ஜோயா சிறு வயதில் இருந்தே மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். டிடிஎஃப் வாசனின் பைக் ரேஸிங்கை பார்த்து மயங்கி அவரை காதலிக்கத் தொடங்கிய அவர் தற்போது குக் வித் கோமாளி பிரபலமாக உள்ளார். பீச்சில் தனது காதலர் டிடிஎஃப் வாசனை தனது மடியில் அமர வைத்து எடுத்துக் கொண்ட போட்டோவையும், டிடிஎஃப் வாசனை கட்டிப் பிடித்துக் கொண்டு படுநெருக்கமாக இருக்கும் போட்டோக்களை எல்லாம் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஷாலின் ஜோயா வெளியிட்டு டிடிஎஃப் வாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஃபேவரைட் பாய்: என்னோட ஃபேவரைட் பாய்க்கு ஹேப்பி பர்த்டே, இந்த வருடம் உனக்கு எல்லாமே நல்லாவே அமையட்டும் என டிடிஎஃப் வாசனுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு மஞ்சள் வீரன் ஹீரோவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அடுத்து ஐபிஎல்: மஞ்சள் வீரன் படத்தை முடித்து விட்டு டிடிஎஃப் வாசன் அடுத்து ஐபிஎல் எனும் டைட்டிலில் உருவாகும் படத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராகவும் டிடிஎஃப் வாசனை அழைத்து வர விஜய் டிவி ஏகப்பட்ட முயற்சிகளை செய்து வருவதாக கூறுகின்றனர். சர்ச்சையான போட்டியாளர்கள் வந்தால் தான் நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பதால் டிடிஎஃப் வாசனை உள்ளே கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











