மஞ்சள் வீரன் படத்திற்கு ஆஸ்கர் விருது கொடுத்தாலும் வாங்க மாட்டேன்.. இயக்குநர் கிரிஞ்ச் பேட்டி!
சென்னை : டிடிஎஃப் வாசன் நடிக்கும் மஞ்சள் வீரன் படத்திற்கு ஆஸ்கர் விருது கொடுத்தாலும் வாங்க மாட்டேன் என்று இயக்குநர் செல் அம் அதிரடி பேட்டி கொடுத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய யூடியூபரான டிடிஎப் வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இவர் நடிக்கும் முதல் படத்தை செல் அம் என்பவர் இயக்குகிறார்.

மஞ்சள் வீரன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வாசனின் பிறந்த நாள் அன்று வெளியானது. போஸ்டர் வெளியானதில் இருந்தே இணையத்தில் மீம்ஸ்கள் பறந்து வருகிறது.
டிடிஎஃப் வாசன்: யூடியூபில் பிரபலமாக இருக்கும் டிடிஎஃப் வாசனை மேலும் பிரபலமாக்கியது வழக்குகள் தான். சில வருடங்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாட நினைத்த வாசன், சென்னையில் மீட்-அப் ஒன்றை வைத்தார். இந்த மீட்டபில் வாசனை பார்க்கும் ஆர்வத்தில், கூட்டம் கூட்டமாக இளசுகள் படையெடுத்ததால், அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதை அடுத்து வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஹீரோ அவதாம்: இந்த சம்பவத்தால் ஒரு நாளில் பிரபலமான, டிடிஎஃப் வாசன் எது செய்தாலும் இணையத்தில் வைரலானது. பைக்கில் அதிவேகமாக சென்றது, பொது இடத்தில் கூட்டத்தை கூட்டியது, ஜிபி முத்துக்கு மரண பயத்தை காட்டியது என அடுத்தடுத்த வழக்குகளில் சிக்கி வாசன் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்த இருக்கிறார். திருவிகா பூங்கா படத்தை இயக்குநர் செல் அம் இப்படத்தை இயக்க உள்ளார்.

மஞ்சள் வீரன்: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த மஞ்சள் வீரன் பட இயக்குநர், படம் குறித்த பல கேள்விகளுக்கு பேட்டி அளித்தார். அதில், டிடிஎஃப் வாசனின் கத்திபோல இருக்கும் முகத்தைப் பார்த்ததில் இருந்து இந்த படத்திற்கு அவர் தான் சரியானவராக இருப்பார் என்று நினைத்தேன். படம் 500 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வருவதாகவும், படத்திற்காக டிடிஎஃப் வாசன் சண்டை, டான்ஸ் போன்றவற்றை செய்து வருகிறார்.
ஆஸ்கர் விருது வேண்டாம்: மேலும், மஞ்சள் வீரன் படம் நிச்சயம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடும். ஆனால், மஞ்சள் வீரன் படத்திற்கு ஆஸ்கர் விருது கொடுத்தால் வாங்க மாட்டேன் ஏன் என்றால், வெள்ளையனே வெளியேறு என்று அனைவரும் போராடி அவர்களை வெளியேற்றி விட்டு, மீண்டும் அவர்கள் கையால் கொடுக்கும் ஆஸ்கர் விருதை வாங்க மாட்டேன். ஆனால், தேசிய விருது கொடுத்தால் வாங்கிக் கொள்வேன் என்றார். பேட்டியிலே இவ்வளவு கிரிஞ்சா பேசும் இயக்குநர் செல் அம் படத்தை எப்படி எடுத்து முடிக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











