அய்யோ.. வலி தாங்க முடியல.. சிறையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட TTF வாசன்!

சென்னை: வலி தாங்க முடியாமல் துடித்த டிடிஎப் வாசனை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த வைகுந்த வாசன் இருசக்கர வாகன நீண்ட தூரம் பயணம் செய்து யூட்யூபில் பிரபலமானார்.

அதிவேகமாக வீலிங் செய்யும் வீடியோக்களை பதிவிட்ட வாசன் 40 லட்சம் சப்க்ரைபர்ஸ் வைத்து இருக்கிறார்.

TTF Vasan who was suddenly admitted to the hospital

பயங்கர விபத்து: டிடி எப் வாசன் சென்னையிலிருந்து கோவை செல்லும்போது காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் லீவிங் செய்ய முயற்சிக்கும் போது நிலை தடுமாறி இவரது வாகனம் சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் அடுத்த மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

15 நாள் காவல்: விபத்தில் கிழே விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவர் ரைக் ரைடுக்கான உடை அணிந்து இருந்ததால்,அதிர்ஷ் வசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து வாசன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ் நேற்றைய தினம் அவரைக் கைது செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதில் அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டதை அடுத்து, வாசன் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

வலியால் துடித்த வாசன்: இந்நிலையில், நேற்று சிறையில் அடைக்கப்பட்ட வாசன் கையிலும் இடுப்பிலும் கடுமையான வலி இருப்பதாக கூறி வலியால் துடித்துள்ளார். இதையடுத்து, புழல் சிறை ஜெயிலரிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கும் நோக்கில் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தற்போது வாசனுக்கு முழு பரிசோதனையும் நடந்து வருகிறது. அது முடிந்த பிறகு வாசன் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X